புதன், 9 ஜனவரி, 2019

தமிழகம் முழுவதும் 8,704 பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு 16,430 பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தம்...

தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி~ முதல்வர் அறிவிப்பு...

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

G.O No:5 பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு...

விடுமுறை - தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் 14-01-2019 அன்று உள்ளூர் விடுமுறை - ஆணை...


Attendance App News...

அனைவருக்கும் வணக்கம். 

பள்ளியில் attendance app மூலம் வருகைப்பதிவு மேற்கொள்வது இனி  காலை(ஒருமுறை ) மட்டும் பதிவு செய்தால் போதுமானது. 

உதவி பெறும் பள்ளிகள் (aided school) attendance app மேம்படுத்தப்படுவதால் வருகைப் பதிவு மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அறிவிப்பு வந்த பின் மீண்டும் தொடங்கலாம்.

இத்தகவலை அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள்ப்படுகிறது. 
நன்றி.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம்~பள்ளி சத்துணவு மையம் ~ உணவின் தரம்/சுவை ஆய்வுப்பதிவேடு…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு-பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுத்தல்- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குழு ஏற்படுத்துதல்-மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளுதல்- சார்பு...

அங்கன்வாடிகளில் தொடங்கப்படவுள்ள எல்கேஜி குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க ஆசிரியைகள் நியமனம்~உபரி பட்டியல் அனுப்ப உத்தரவு...

மார்கழித் திங்கள் பாவை விழா - இந்து சமய அறநிலையத்துறை - திருப்பாவை மற்றும் திருவெம்பாவை - மாணவர்களுக்கான போட்டி - மாவட்ட அளவில் நடத்துதல் - முதல் 3 மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குதல் - பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உத்திரவிடுதல் -குறித்து...

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்...


செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய 'கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.