திங்கள், 16 ஏப்ரல், 2018

வெப்பத்தாக்கம் (HEAT STROKES)~செய்யவேண்டியவை/செய்யகூடாதவை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு) : தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள்...

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு...


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

NEET Exam Hall Ticket Will Available Within 1 Week...


ஓரிரு நாட்களில் நீட் தேர்வு ஹால் டிக்கெட்...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்னும் ஓரிருநாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 15 லட்சம்மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

TNPSC-மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது...

ஆசிரியர் பட்டய தேர்வு ஏப்ரல்-21ம் தேதிவரை விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு...


தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர தேவையான டிப்ளமா படிப்புக்கான தேர்வு ஜூன் 4 முதல் 21 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 16 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.

 தனித்தேர்வர்கள், தங்கள் விபரங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு) ,காலை 09:30 மணிக்கு வெங்கடேஷ்வரா நடுநிலைப்பள்ளி ஆண்டகலூர்கேட்டில் (இராசிபுரம்) நடைபெறுகிறது...

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது...


நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேஜிக் ஹெட்செட்~ நீங்கள் நினைப்பதைக் செய்யும்...


நாம் ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போதே அந்தக் காரியத்தை செய்து முடித்திருந்தால் எப்படி இருக்கும்?... சூப்பர் ஹீரோ கதைகளிலும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டும்தான் இது சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் மேலே சொன்ன விஷயம் உண்மையில் நடக்கூடியதுதான் என தங்கள் கண்டுபிடிப்பை முன் வைத்திருக்கிறது. மாஸாஷுசேட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்( Massachusetts Institute of Technology). அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஒரு ஹெட்செட் மூலம்தான் மேலே சொன்ன சூப்பர் ஹீரோ கதை சாத்தியமாகியிருக்கிறது.

இந்த ஹெட்செட்டை நாம் மாட்டிக்கொண்டு மற்றவர்களோடு உரையாடும்போது நமது வாயைக்கூடத் திறக்க தேவையில்லை. நாம் மனதில் நினைப்பதை இந்த ஹெட்செட்டே வெளியே சொல்லிவிடும். அதுபோல கம்யூட்டர், டிவி, ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கூட நாம் ஏதும் செய்யத் தேவையில்லை. அதனைப் பார்க்கும்போது நமது மூளையில் தோன்றும் எண்ணங்களே போதும். உதாரணமாக நமது கம்யூட்டரில் எதையாவது ஒப்பன் செய்ய வேண்டும் என்றாலோ எதையாவது டைப் செய்ய வேண்டும் என்றாலோ நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மூலம் அந்தச் செயல் நிகழ்ந்துவிடும். இது கம்யூட்டருக்கு மட்டுமல்ல மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் பொருந்தும்.

இன்னும் நம்ப முடியாமல் கூட இருக்கலாம். மாஸாஷுசேட்ஸ் தொழில்நுட்ப நிறுவன ஊடக ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பல ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு இந்த ஹெட்செட்டின் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர். 

காதுப்பகுதியின் பின்புறத்தில் இருந்து கன்னம், தாடை வழியாக வாய்க்கு அருகில் வந்து முடிவது போன்று உள்ளது இந்த ஹெட்செட். இந்த ஹெட்செட்டின் பல இடங்களில் எலக்ட்ரோட்கள் பொருத்தப்பட்டுள்ளன. நமது மூளையில் யோசிக்கும்போது உருவாகும் சிக்னல்களை இந்த எலோக்ட்ரோட்கள் மூலம் அறிந்து அதற்கேற்ப மொழியையும் செயல்களையும் இயக்குகிறது இந்த ஹெட்செட். அதுமட்டுமில்லாமல் இணையத்தோடு இணைத்திருப்பதால் பல்வேறுத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். ஹெட்செட்டின் ஏழு இடங்களில் சென்சார்கள் இருக்கின்றன. ஹெட்செட்டானது எலும்போடு இணைந்து தகவல்களைக் கடத்துகிறது. அதனால் மற்றவர்களோடு உரையாடுவதில் எந்தப் பிரச்சனையும் ஏறப்படவில்லை. முகத்தின் தசைப்பகுதியிலும் எலும்பிலும் இருந்தாலும் இதனால் தோலுக்கோ எலும்புக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நம் மூளையில் யோசிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த ஹெட்செட் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது. இந்த ஹெட்செட்டில் நம்மிடையே திரும்ப பேசும் செயற்கை நுண்ணறிவும் இருப்பதால் நம் செயல்களை இன்னும் எளிதாக்குகிறது. நாம் யோசிக்கும் விஷயங்களை 92% துல்லியமாக உணர்ந்து செயல்படுகிறதாம் இந்த ஹெட்செட். இதுவரை 0 விலிருந்து 9 வரையிலான எண்களையும் 100 வார்த்தைகளையும் படியெடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹெட்செட் இன்னும் மேம்படுத்தப்படும் என்று கூறுகின்றனர் இதனை உருவாக்கிய MIT ஆய்வாளர்கள்.

இளைய ஆசிரியர்கள் யார்? பணி நிரவல் செய்ய பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...