வெள்ளி, 20 ஏப்ரல், 2018

புதிய பாடத்திட்டம் - புதிய பாடப்புத்தகம் - பாடக்கருத்துக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான - பணிமனை சார்ந்து...

STAFF FIXATION ~ Calculation…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு ~ தமிழக அரசு அறிவிப்பு…

உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விடுவிப்புச்சான்றிதழ்...

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்~ தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு…


தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.மாணவர் சேர்க்கை நடத்தாத பள்ளிகள், தற்காலிகமாக மூடப்படுகிறது. சேர்க்கை குறையும் பள்ளிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், செலவினங்கள் குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள், இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல் ஏற்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'ஜூரோ என்ரொல்மெண்ட்' எனப்படும் புதிய சேர்க்கையேஇல்லாத நிலையை,உருவாக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் ஒன்றாம் வகுப்பில், 20 மாணவர்களாவது சேர்க்க வேண்டும். அரசின் திட்டங்கள், பாடத்திட்ட மாற்றம், கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை விளக்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்களுடன் இணைந்து, அரசுப்பள்ளியை மக்களின்பள்ளியாக மாற்ற, ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ்1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாறுகிறது. துவக்க வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாறுவதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகலாம். வரும் மே 2ம் தேதி முதல், சேர்க்கை பணிகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'புதிய சேர்க்கை இல்லாத பட்சத்தில், உரிய காரணம் விளக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுமையான வழிமுறைகளில் பெற்றோரை அணுக திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அறிவிப்பில் குளறுபடி குழப்பதத்தில் ஆசிரியர்கள்...

வியாழன், 19 ஏப்ரல், 2018

தொடக்கக்கல்வி நிறைவுச் சான்றிதழ்...

பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு...


2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அவர்களுக்குரிய‌ அரசு அலுவலகங்களில் வழங்கலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அரசு/அரசுநிதி பள்ளிகளில் முதுகலை/பட்டதாரி/இடைநிலை ஆசிரியர்: மாணவர் விகிதம் ~ ஆகஸ்டு முதல் தேதி அடிப்பயையில் கணக்கிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகள்…

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...


பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. 

இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி ,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும்,
 
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும்,

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.