புதன், 20 ஜூன், 2018

பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018~19…

ன,ண - ர,ற - ல,ள, ழ கர வேறுபாடு அறிய உதவும் பயிற்சித்தாள்...

21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும்~ CEO செயல்முறைகள்…

National award to Teachers ( Including ICT ) தேசிய நல்லாசிரியர் விருது Apply செய்ய மதிப்பெண் முறை அமல் ~ தமிழ் நாட்டிக்கு 6 இடங்கள் மட்டுமே…

'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது!


ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' இல்லாவிட்டால் விருது கிடையாது; சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என, தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 5ல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:

இதுவரை, மொத்தம், 374 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில், 20 விருதுகள், சமஸ்கிருதம், அரபு மற்றும் பெர்ஷியன் மொழி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறை, விருதுகளின் எண்ணிக்கை, 374ல் இருந்து, தேசிய அளவில், 145 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 29 மாநிலங்களுக்கு, 120; ஏழு யூனியன் பிரதேசங்களுக்கு, 8; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள, மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 17 விருதுகள் வழங்கப்படும். தமிழகத்திற்கு, இதுவரை வழங்கப்பட்ட, 22 விருதுகள், ஆறாக குறைக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என, விருதுகள் பிரிக்கப்படாதுl மாவட்ட பரிந்துரைக் குழுவுக்கு, இதுவரை, முதன்மை கல்வி அதிகாரி தலைவராக இருந்தார்.

இனி, மாவட்ட கலெக்டர் தலைமையில், குழு இயங்கும். மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., அல்லது கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த, ஒருவர் பிரதிநிதியாக இருப்பார், விண்ணப்பித்த ஆசிரியரின் பள்ளிக்கும், அவர் சார்ந்த இடத்துக்கும் சென்று, மாவட்ட கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும். லஞ்ச ஒழிப்பு அல்லது கண்காணிப்பு துறையின் சான்றிதழையும், ஆசிரியர் பெற வேண்டும், மாநில கமிட்டிக்கு, இதுவரை, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைவராக இருந்தார்.

இந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குனர், கமிட்டியின் உறுப்பினர் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், வகுப்புகளை, 'கட்' அடித்திருக்க கூடாது. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில், தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். 'டியூஷன்' என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. 'ஆதார்' எண் கட்டாயம் இருக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 19 ஜூன், 2018

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலிருந்து நகராட்சிப்பள்ளிகளுக்கு இடமாறுதல்கள்,பணியிடநிரவல்கள்,மனமொத்தமாறுதல்கள் 2017-18ஆம் கல்வி ஆண்டில் வழங்கப் பட்டுள்ளது.இதேப்போன்று 2018 -19ஆம் கல்வி ஆண்டிலும் பணியிட நிரவல்கள்,இடமாறுதல்கள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் வழங்கப்படுமா?எனும் ஐயப்பாட்டிற்கு தெளிவுரை கோருதல்-சார்பு...

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலிருந்து நகராட்சிப்பள்ளிகளுக்கு இடமாறுதல்கள்,பணியிடநிரவல்கள்,மனமொத்தமாறுதல்கள் 2017-18ஆம் கல்வி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதேப்போன்று 2018 -19 ஆம் கல்வி ஆண்டிலும் பணியிடநிரவல்கள், இடமாறுதல்கள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் வழங்கப்படுமா? எனும் ஐயப்பாட்டிற்கு தெளிவுரை கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரின் கடிதம்...

பணி விடுவிப்பு உத்தரவு...

பணி விடுவிப்பு சான்றிதழ்...

தேசிய நல்லாசிரியர் விருது- ஜுன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்~ பள்ளிக்கல்வி இயக்குநர்…

2017ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் கூறியுள்ளார். 
என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் பொது மாறுதல் 2018-19 - நாமக்கல் மாவட்டம் - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் - குறைபாடுகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...