திங்கள், 2 ஜூலை, 2018

5 ஆயிரம் கி.மீ தூரம் செல்லும் அக்னி-5 ஏவுகணை ராணுவத்தில் விரைவில் சேர்ப்பு...

Penalty on late filling of income Tax Return ~Section 234F...

ஸ்மார்ட்போனிலேயே பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?


✈மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் எம்பாஸ்போர்ட் சேவா செயலியில் (mPassportSeva) புதிதாய் பாஸ்போர்ட் பெறுவோர் விண்ணப்பிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

✈ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் எம்பாஸ்போர்ட்சேவா ஆப் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த செயலி 'கன்சுலர், பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு' (Consular, Passport and Visa (CPV) Division) மூலம் வழங்கப்படுகிறது.

✈தற்போதைய பாஸ்போர்ட்சேவா வலைத்தளத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளை கொண்டே இந்த செயலியில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். 

✈எனினும் மொபைல் செயலியின் இன்டர்ஃபேஸ் புதிதாய் மாற்றப்பட்டு இருக்கிறது.

✈ஸ்மார்ட்போனில் செயலியை கொண்டு பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்:

செயலி டவுன்லோடு செய்யவும்

1 - செயலி டவுன்லோடு செய்யவும் 
முதலில் இலவசமாக கிடைக்கும் எம்பாஸ்போர்ட் சேவா செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2 - பதிவு செய்யவும்
செயலியை திறந்ததும், திரையில் தோன்றும் புதிய பயனர் பதிவு செய்யக்கோரும் 'New User Registration' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - பாஸ்போர்ட் அலுவலகம்
நீங்கள் வசிக்கும் நகரத்துக்கு ஏற்ப பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்ய வேண்டும். 

புதிய வழிமுறையில் பயனர்கள் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்க வழி செய்கிறது.

 அந்த வகையில் உங்களது சொந்த ஊர் சென்னை ஆனால் நீங்கள் மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்களில் வசித்தாலும், புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, அவற்றை நீங்கள் தற்போது இருக்கும் நகரிலேயே பெற முடியும்.

முழு விவரங்கள்:

4 - முழு விவரங்கள்
இனி செயலியில் உங்களது முழு விவரங்கள்: 

பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

5 - பிரத்யேக லாக் இன்
உங்களுக்கான பிரத்யேக லாக்-இன் குறியீடு தேர்வு செய்து, குறியீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

அதன்பின் கடினமான கடவுச்சொல் ஒன்றை பதிவிட வேண்டும். 

உங்களது மின்னஞ்சல் லாக்-இன் குறியீட்டை கூட செயலியில் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பு பலப்படுத்தவும்:

6 - பாதுகாப்பு பலப்படுத்தவும்
எதிர்காலத்தில் ஏதேனும் சூழலில் பாஸ்வேர்டு ரீசெட் செய்வதற்கான பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலை செட் செய்யவும்.

 நீங்கள் செட் செய்யும் பாஸ்வேர்டு மறந்து போகும் பட்சத்தில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

7 - கேப்ச்சா
தகவல்களை உறுதி செய்ததும், சிறிய புகைப்படத்தினுள் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை டைப் செய்து சப்மிட் (Submit) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

மின்னஞ்சல்:

8 - மின்னஞ்சல்
உங்களது அக்கவுன்ட்-ஐ வெரிஃபை செய்ய பாஸ்போர்ட் அலுவலம் சார்பில் அனுப்பப்படும் மின்னஞ்சலை க்ளிக் செய்ய வேண்டும்.

9 - அக்கவுன்ட் வெரிஃபிகேஷன்
மின்னஞ்சலில் வரும் வெரிஃபிகேஷன் லின்க்-ஐ க்ளிக் செய்ததும், வலைத்தளம் ஒன்று திறக்கும் அங்கு உங்களின் லாக்-இன் ஐடியை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

செயலியை ரீஸ்டார்ட் செய்யவும்:

10 - செயலியை ரீஸ்டார்ட் செய்யவும்

இனி எக்சிஸ்டிங் யூசர் (Existing User) பட்டனை க்ளிக் செய்து உங்களின் லாக்-இன் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் கேப்ச்சா உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். 

இனி புதிதாய் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் திரை திறக்கும்.

11 - ஆவணங்கள்
இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்து, திரையில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பணம் செலுத்தலாம்:

12 - பணம் செலுத்தலாம்
புதிய பாஸ்போர்ட் பெற டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்ய முடியும்.

13 - ஆவணம் சரிபார்க்கவும்
விண்ணப்ப படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் பூர்த்தி செய்ததை உறுதிப்படுத்திக் கொண்டு உங்களின் ஆவணங்களை சரிபார்க்க முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

Aadhaar ~ PAN Link Last Date Extended To 31.03.2019...

Persons Who can File ITR in "SAHAJ"... .


* Individuals having income upto Rs.50 Lakhs from salary/
single house property/other
income (Interest etc.) can file
IncomeTax Return on one page
ITR Form No 'SAHAJ' quickly
and easily by following these
simple steps...

i) Log on to your e-filing account on www.incometaxindiaefiling.gov.in

1) Select ITR-1 and fill in the requisite details.

2)Calculate tax.

DEPARTMENTAL EXAMINATION 2018~TNPSC OFFICIAL TENTATIVE ANSWER KEY PUBLISHED…

பாஸ்போர்ட்டுக்கு புது ‘App’...


இந்தியாவின் எந்த பகுதியில் வசிக்கும் நபரும், மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்'பை,  வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

 இதில், கம்ப்யூட்டர், பிரிண்டர் இன்றி, மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதுடன், அதற்கான கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான நேரம், தேதியை பெறும் வசதியும் உள்ளது.

இதனால், புதிய, 'மொபைல் ஆப்'பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வகையிலான பாஸ்போர்ட்டிற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், 10 லட்சம் பேர் அந்த 'ஆப்'பை பதிவிறக்கம் செய்துள்ளதாக, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2018 ஜூலை மாதம் பள்ளி நாள்காட்டி...


* BEO அலுவலக குறைதீர் நாள் : 07.07.18

* சனிக்கிழமை வேலை நாள்கள்: 21.07.18 & 28.07.18

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்: 
(முதல்வகுப்பு)

*1 batch: 13&14.07.18
*2 batch: 16&17.07.18
*3 batch: 18&19.07.18
*4 batch: 20&21.07.18

 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிவகுப்புகள்: (VI std)

Maths&social :

*1 batch: 9&10.07.18
*2 batch : 11&12.07.18

Tamil& Science:

*1 batch : 13&14.07.18
*2 batch: 16&17.07.18

English :

*1 batch:18&19.07.18
*2 batch: 20&21.07.18 

* மதவிடுப்பு  இல்லை

* அரசு விடுமுறை இல்லை

* குறுவளமையப்பயிற்சி வகுப்பு இல்லை

* கல்வி வளர்ச்சி நாள் : 15.07.18

*ஜூலை மாத வேலை நாள்கள் : 24

 *31.07.18 - முடிய பள்ளி  மொத்த
வேலை நாள்கள் :45

Whatsapp~இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்…


 வாட்ஸ்அப் அப்டேட்
தற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது. இதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். ஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அனைத்து நபர்களும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப் ஃபீட்டா ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.18.201 மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 2.18.70 இவ்விரண்டு ஃபீட்டா வெர்ஷன்களிலும் இந்தப் புதிய வசதி சோதனையில் உள்ளது.

 இதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் sent messages என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் க்ளிக் செய்தால், All participants அல்லது only admin என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். only admin என குரூப் செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும். All participants ல் குரூப் செட்டிங்கை மாற்றினால், அனைவரும் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். இந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நபர்களை மட்டும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியாதபடி ப்ளாக் செய்யும் வசதியும் இனி எதிர்காலத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.ரெ.இளங்கோவன் அவர்கள் வயது முதிர்வில் பணி ஓய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு அலுவலர் நியமனம் ஆணை வெளியிடப்படுகிறது...