ஞாயிறு, 14 அக்டோபர், 2018

முப்படை களில் சேருவதற்கு சிறப்பு பயிற்சிகள் ~ டிஏவி குழுமம் அறிவிப்பு

முப்படைகளில் சேர சிறப்புப் பயிற்சி வகுப்புகள்; இயலாதவர்க்கு இலவசக் கல்வி: டிஏவி (DAV) குழுமம் அறிமுகம்

💧💧டிஏவி குழுமம் சார்பாக ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளில் (ராணுவம், விமானம் மற்றும் கப்பல்) சேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களுக்கு இலவசப் பயிற்சி அல்லது ஸ்பான்சர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் சேர என்ன தகுதி?



* 18 முதல் 24 வயது வரை அனைத்துப் பட்டதாரிகளும், பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் சேரலாம்.

* ஆண், பெண் என இருபாலருக்கும் இதில் சம வாய்ப்பு உண்டு. ஆனால் திருமணம் ஆகாதவராக இருத்தல் அவசியம்.

* ராணுவப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* கப்பற்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

* விமானப்படைக்கான பயிற்சியில் சேர பொறியியல் முடித்திருக்க வேண்டும் அல்லது பள்ளிப் படிப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்.

* அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மணமாகாத/ கணவனை இழந்த பெண்களுக்கு வாய்ப்பு உண்டு. இவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி வகுப்புகள் குறித்துப் பேசிய டிஏவி குழுமத்தின் கல்வி சார் ஒருங்கிணைப்பாளர் வசந்தா பாலசுப்ரமணியன், ''உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவான மாணவர்களே முப்படைகளில் சேர முன்வருகிறார்கள்.

மருத்துவர், பொறியாளர் என்று தேர்ந்தெடுக்கும் நாம் பாதுகாப்புத் துறை சார்ந்த வேலைகளை விருப்பத் தேர்வாக எடுத்துக் கொள்வதில்லை. ராணுவம், விமானம் ,
கப்பற்படை என்றாலே மரணத்துடனேயே இணைத்துப் பார்த்து அச்சப்படுகிறார்கள். அதே துறைகளில் மற்ற பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அதனால் முப்படைகளுக்கான தேர்வு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம்.

இதனால் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்தி, குறைவான கட்டணத்தில் தரமான ஆசிரியர்களைக் கொண்டு நடத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை சார்ந்த படிப்புக்கு ரூ.7,000 கட்டணம்.

இதற்கான பயிற்சி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியுள்ளது. 2019 பிப்ரவரி 2-ம் தேதி வரை மொத்தம் 36 அமர்வுகள் பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு அமர்வில் இரண்டரை மணி நேரம் வகுப்பு எடுக்கப்படுகிறது. அதிலேயே தேர்வுகள், விடைத்தாள் திருத்தம் உண்டு.


பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அல்லது ஸ்பான்சர்கள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள்- முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் செயல் முறைகள்


தமிழ்நாடு அமைச்சு பணி- 15/10/18 நிலவரப்படி காலிபணியிட விவரம் கோருதல் - இயக்குனர் செயல்முறைகள்


DEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - மாவட்டக் கல்வி அலுவலக பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடத்துதல்




சந்திராயன்-2 விண்கல இன்ஜின் சோதனை வெற்றி...

உறுதி செய்தது பேஸ்புக் நிறுவனம்~3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு…

சனி, 13 அக்டோபர், 2018

பிரமாண்டமாக நடைபெற்ற ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு - சேலம்
















Easy English SSA - SALM Words

பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்த்து எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடித்து அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்



ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் குப்பம்பாளையம் தொடக்கப் பள்ளியில் 55 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் எவர்சில்வர் வாட்டர் பாட்டில்களில் மட்டுமே தண்ணீர் கொண்டு வந்து குடிக்கின்றனர். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருவரும் பயன்படுத்துவதில்லை. எவர்சில்வர் கேன் வாங்க முடியாத சூழல் உள்ள குழந்தைகளுக்கு தலைமையாசிரியர் திருமதி த. சக்தி அவர்கள் தமது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சேலம் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் நவம்பர் 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தலைவர்கள் அறிவிப்பு



சேலம் ஜவகர்மில் அருகே உள்ள மண்டபத்தில் இன்று பிற்பகல்2:00 மணிக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
1)-  1-3-2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,
2)சிறப்பு கால முறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
3)21 மாத கால ஊதிய குழுவில் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,
4) 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை முழுமையாக கைவிட வேண்டும்.
5) இடைநிலை ஆசிரியர்கள்,முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் இன்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பத்தாயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அரசு பணிகள் பாதிக்கும். அரசு பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்.
இதுவரை இருந்த எல்லா முதல்-அமைச்சர்களும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து பேசுவார்கள். ஆனால் தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி 5-ம் வகுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு 82 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக கூறி வருகிறார்கள். குடிகாரர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதாக அநாகரீகமாக பேசி வருகிறார்.
 இதை கண்டிக்கும் வகையில் சேலத்தில் அவரது வீட்டின் அருகே இந்த மாநாடு நடத்தப்பட்டது.