வியாழன், 15 நவம்பர், 2018

ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் முகமாக, 8-ஆம் வகுப்பு மாணவர் பரத் ஒரு நாள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர் முன்பு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர். மாணவர்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்களைக் கவனித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மாணவர்களின் இருக்கையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர்


நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு...

இனிகுறை தீர்ப்பு முகாம் கட்டாயம் பள்ளிக்கல்வி இயக்குனர்உத்தரவு..


மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர்முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்விஅலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன்உத்தரவிட்டுள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில்முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாகமட்டத்திலே சீர் செய்துவிடலாம்.





இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால்,. நீதிமன்றத்தை நாடுவதேஇறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்புவழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனிகட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.



பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டசுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது.




ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.



இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாதந்தோறும் முதல், சனிக்கிழமை, குறைதீர் முகாம் நடத்தவேண்டும்.



இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து, இயக்குனரகத்துக்குதகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இல்லாவிடிலும், தகவல் அளிப்பது அவசியம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது .

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 30 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அல்லது வாழ்க்கை தொழில் கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு, அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொற்றுநோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை -81 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில், நவம்பர் 17 முதல் 28 -ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவம்பர் 29 -ஆம் தேதி மாலை 4.30 மணி வரை மட்டுமே பெறப்படும். மேலும், தகவல்களுக்கு 044 2591 2686, 2591 2687 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்...

தேனீ வளர்ப்பு ~ இலவச பயிற்சி...

ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை~புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து…

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு...

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்.கே.ஜி. வகுப்புகளில் பாடம்...

தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது பெற 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு...