வியாழன், 16 மே, 2019

TNPSC- DEPARTMENTAL EXAMINATIONS-2019-RESCHEDULED TIME TABLE

கல்வித் தகவல் மேலாண்மை மையச் சேவையை பள்ளி ஒருங்கிணைப்பு திட்ட ஆசிரியர்பயிற்றுநர் வழியி்ல் மேற்கோள்க! வட்டார வளமையத்தை கல்வித்தகவல் பொதுச்சேவை மையமாக அறிவித்திடுக!

அன்பானவர்களே!வணக்கம்.

நாமக்கல் மாவட்டத்தின்  தொடக்கப்பள்ளி் மற்றும் நடுநிலைப்பள்ளி  தலைமைஆசிரியர்கள்  "இஎம்ஐஎச் இணையம்"
சார்ந்த  பணிகளுக்கு கொளுத்தும் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரக் கோடை வெயிலில்  கணினி மையங்களை தேடி அலையும் பேரவலம் கண்டும்,கேட்டும் நல்மனம் அதாவது நம்மனம் பதறுகிறது.
 
அதிகாரவெறியும், அதிகாரப்போதையும், அகந்தையும், 
மமதையும் கொண்டோர் இப்பேரவலத்தை மனதுக்குள் இரசித்துக்கொண்டுள்ளனர் என்பது கோடைவெயிலின் கொடுமையை விட  கொடுமையானதாகும்.
இத்தகு கெடுமனம் கொண்டோரின் கேடுகெட்டச் செயலானது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதுப் போன்றதாகும்.

1)கோடை விடுமுறைக்காலப்பணியாளர்களை கோடைவிடுமுறையில் பணிக்கு அழைப்பது, கூட்டத்திற்கு கட்டாயப்படுத்தி  வரவைப்பது என்னவகை நியாயம்(!?). இத்தகு விடுமுறையில் உள்ள/தனது சொந்த விடுப்பில்  உள்ள ஒரு அலுவலக அடிப்படைப்பணியாளரை,அலுவலகப்பிரிவு எழுத்தரை அலுவலகத்திற்கு வரவழைத்து ஒரு கோப்பு முடித்துவிட முடியுமா(!?).ஒரு வேலை வாங்கிவிடமுடியுமா(!?). வேலை நாளில், வேலைநேரத்திலேயே வேலைவாங்கி அலுவலக நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதே கச்டமாக உள்ளது எனும் புலம்பல்கள் தான் அலுவலக வட்டாரங்களில் கேட்கமுடிகிறது.

2)தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணிணிகள் இருக்கலாம்.ஆனால் எல்லாப்பள்ளிகளுக்கும்  கணிணி வழங்கப்பட்டு விட்டது என்று கல்வித்துறையால் கூறிவிட முடியாது. கணிணி வழங்கப்பட்ட பள்ளிகளுக்கே கணிணி இயக்குபவர்கள், கணிணி ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்களா(!?). கணிணியை இயக்கிட ஆள்கள்நியமனம் செய்யப்பட்டனரா(!?). இதைஎல்லாம்  தெரிந்துக் கொண்டும்/ அறிந்துக்கொண்டும் 
இணையப்பணிகளை தலைமைஆசிரியர்களுக்கு ஒதுக்ககீடு செய்திட வேண்டாமா(!?). இணையப் பணிகளை செய்யுமாறு பணித்திட வேண்டாமா(!?).

3)தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக் கு மின் இணைப்பு இருக்கிறது.கணினி இருக்கிறது. இணைய இணைப்பு ஏதும் ஏற்படுத்தி தரப் படவில்லை. 
கணிணி் இயக்குபவர்களும் நியமிக்கப்படவில்லை. ஆனால் கல்வி ஆண்டுமுழுதும் கணிணியில்,
இணையத்தில் தலைமையாசிரியர்கள் பணிகளை 
தொய்வின்றி  செய்திட வேண்டும் என்று நிர்பந்தம்செய் வது,
கட்டாயப்படுத்துவது,
அச்சுறுத்துவது என்னவகை நியாயம்(?!).
எந்த நாட்டு,
எந்த ஊரு  நியாயம்(?!).

4)தனியார் இணையமையங்களுக் கு பள்ளித்தலைமையாசிரியர்கள் சென்று சொந்தப் பணத்தை அதாவது கைப்பணத்தை, அதாவது சம்பளத்தில் ஒரு பகுதியை செலவழித்து இஎம்ஐஎச் பணிகளை முடித்தே ஆக வேண்டும் என்று மிரட்டும்  கல்வித்துறை அலுவலர்கள் என்றைக்காவது ஒருநாளாவது தனது சொந்தப்பணத்தில் ஒரு பத்து ரூபாயை செலவழித்து அலுவலகப்பணிகளை மேற்கொண்டதுண்டா(?!).

5)ஒன்றிய அளவிலான வட்டார வளமையத்தில் ,வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இணைய வசதி அரசு செலவில் ஏற்படுத்திதரப்பட்டுள்ளது.இந்த இணையவசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று மனதார என்றாவது ஒரு நாளாவது இந்த அலுவலர்கள் சொன்னதுண்டா(!?).

6)கல்வி  அலுவலர்கள் தலைமையாசிரியர்களின்  மீதும்,ஆசிரியர்கள் மீதும் பாசமும்,நேசமும்  கொள்ளாது போனாலும் பரவாயில்லை.
ஒவ்வாமைப் பாராட்டாது இருந்தாலே போதுமானதாகும். ஆசிரியர்களிடத்தில் ஒவ்வாமைக் கொள்ளாது பணியாற்றிட வேண்டும் எனும் நினைப்பேதும் இவர்களிடத்தில் இருக்கிறதா(!?).

7)எதற்கெடுத்தாலும் பள்ளி ஆசிரியர்களை மிரட்டுவது,எதற்கெடுத்தாலும் குறைச் சொல் வது, இவைகளைத் தவிர வேறெதையாவது இவ்வலுவலர்கள் முன்மொழிகின்றார்களா(!?).வழிமொழிகின்றார்களா(!?). குறைசொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளோரால் இக் கல்வித்துறை என்னபாடுபடும்(!?). 

8)பள்ளி ஒருங்கிணைந்த திட்டத்தின் வட்டார வளமையங்களில் இணையவசதி உள்ளது.கணினி்இயக் குபவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பத்துக்கும் குறையாத வகையில் ஆசிரியப்பயிற்றுநர்கள் உள்ளனர்.  இப்போது கோடைவிடுமுறை என்பதால் பள்ளிப்பார்வை ஏதுமின்றி வளமையத்தில் தான் குவிந்துள்ளனர். இவர்களைக் கொண்டு பள்ளிசார்ந்த இணையப்பணிகளை செய்யாது பள்ளித்தலைமையாசிரியர்களை தனியார் இணைய மையங்களை நோக்கி விரட்டி விடுவது ஏனோ(!?).  

9)என்னென்ன விபரங்கள் வேண்டும் ,என்னென்ன கலங்கள் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் உறுதியாக்கி இறுதி வடிவம் ஏதும் தராமலேயே ,அன்றாடம்  அரைகுறையாகவே இணையத்தில்  படிவங்களின் வடிவமைப்புகள்  இருக்கும் நிலையில் , தலைமையாசிரியர்களை உள்ளீடுசெய்யுங்கள் என்பதும்,மாற்றி ...மாற்றி ...பதிவிடச்செய்வதும்  என அள்ளித் தெளித்த கோலமாய் செய்துமுடியுங்கள் என்று அவசரப்படுத்துவதன் மூலம் தேவையற்ற 
கால விரயமும், காசு விரயமும்,அலைச்சலும் , விரக்தியும் தான் ஏற்படுகிறது; விஞ்சுகிறது  என்பதையாவது கல்வி அலுவலர்கள் உணருவார்களா(!?).    
             
மேற்கண்டவற்றையெல்லாம் பரிசீலித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் குழுவாகச் சென்று தங்களது ஒன்றியத்தின்  வட்டாரகல்வி அலுவலர் மற்றும் வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரிடம் முறையாக முறையீடு செய்யுங்கள்.  

மேலும்பள்ளித் தலைமையாசிரியர் பெருமக்கள் தங்களது பள்ளிக்குரிய ஆசிரியப் பயிற்றுநரைத் தொடர்புக்கொண்டு  இணையப்பணிகளை செய்துதருமாறும், இப்பணிக்கு உதவிடுமாறும் கோருமாறு கேட்டுக்கொள்ளச்சொல்லுங்கள்.
இணையப்பணிகள் சார்ந்து  கல்வித்துறைஅலுவலர்களால் கடுமையான அச்சுறுத்தல் ஏதும் தலைமையாசிரியர் பெருமக்களுக்கு,மன்றப்பொறுப்பாளர்களுக்கு நேரிடையாகவோ/மறைமுகமாகவோ விடுக்கப்பட்டால் அறவழியில் நேரடி களநடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் .                                  நன்றி.
           ~முருகசெல்வராசன்.

ஆசிரியர் தேர்வு வாரியம் ~ பத்திரிக்கைச் செய்தி…

2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (TPF 2018-2019 Account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்...

கணக்கீட்டு தாளை  http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதளத்தில் தங்கள் சேமநலநிதி   கணக்கு எண்                 Gpf /Tpf No,

 Date of birth,

 Suffix (EDN/PTPF/MTPF)

உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

TPF க்கும்
CPSக்கும் suffix பதிவு செய்யவேண்டியவை

நகராட்சியாக இருந்தால் MTPF,

ஊராட்சியாக இருந்தால் PTPF,

CPS மட்டும் தற்சமயம் EDN.

TPF உதவிபெறும் பள்ளியாக இருந்தால் EDN.


தொடக்கப் பள்ளிகளில் Bio - Metric Adance நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிக் கோரி தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


CPS-MISSING CREDITS இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு


புதன், 15 மே, 2019

மொழிக்கொள்கை : ஒத்தையா ரெட்டையா ஆட்டமல்ல!


3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல் பதுக்கைகள் ~ மண்ணில் புதைந்து கிடக்கும் மக்காத வரலாறு…

டிசி வழங்கும்போது ஜாதி குறிப்பிட புதிய நடைமுறை அமலாகிறது ~பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு…

Tamilnadu Govt Jobs 2019-16489 Vacancies


Tamilnadu Govt Jobs 2019-16489 Vacancies

ORGANIZATION NAMEVACANCIESAPPLY LINKLAST DATENIT

Trichy Recruitment 2019Various PostClick Here13-05-2019

Indian Agricultural Research Institute27Click Here17-05-2019

Can Fin Homes Recruitmen110Click Here18-05-2019

FACT Recruitment 2019274Click Here20-05-2019

UPSC Recruitment 2019323Click Here20-05-2019

Indian Navy Recruitment121Click Here25-05-2019

NABARD Recruitment 201979Click Here26-05-2019

SSC Recruitment 20198000Click Here29-05-2019

TNEB-TANGEDCO-Recruitment 20195000Click Here30-05-2019

TNFUSRC Recruitment 2019564Click HereMay 3rd Week

Indian Army Recruitment 2019100Click Here08-06-2019

OFB Recruitment 20191704Click Here09-06-2019

Indian Coast GuardVarious PostClick Here10-06-2019

BSF Recruitment 20191072Click Here12-06-2019

Bharat Petro Resources Limited15Click Here15-06-2019

Geological Survey of India Recruitment37Click Here25-06-2019

TNPSC Annual planner 2018 2019VariousClick HereUpdated