வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு கல்வித்துறை கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைகவசம் ( Helmets) அணிய வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை








NOONMEAL விவரங்களை EMISல் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்...

மூன்றாம் மற்றும் நான்காம் இணை விலையில்லா வண்ணாச் சீருடைகள் வழங்குவதற்கான தேவைப்பட்டியலினை கல்வித்தகவல் மேலாண்மை அமைப்பு (EMIS) இணையதளத்தில் உள்ளீடு செய்தல் - தொடர்பாக...

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை EMIS தளத்தில் மேற்கொள்ளும் வழிமுறைகள்...





வியாழன், 15 ஆகஸ்ட், 2019

PG TRB 2019 - Exam Schedule Published...

பாவலர்.க.மீ., அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து...

வாழ்விலும், தாழ்விலும்      ஒரே கொள்கைக்குச் சொந்தக்காரர் தம்பி மீனாட்சிசுந்தரம். அஞ்சாமல் அக்கொள்கை வழி இயக்கும் ஒரே இயக்கம் ஆசிரியர்மன்றம்!செயற்கரிய செயல்களைச் செய்துவரும் ஆசிரியர் மன்றத்திற்கு  என்றும்          நான் தோழனாவேன்! -என்கிறார் தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்கள்.

 தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டும், வாழ்த்தும் பெற்றுள்ள  
கவிமாமணி, ஆசிரியர் இனக்காவலர்,    முனைவர், ஒளவை, பெரியாரியலாளர், 
தமிழ்நாடு சட்ட மன்ற மேலவை உறுப்பினர், 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்.
பாவலர்.திரு.க.மீ. , அய்யா அவர்களுக்கு 15.08.19் அன்று இனிய பிறந்தநாள் . இவ்வினிய மகிழ்நாளில் பாவலர்அய்யா அவர்களை நாமக்கல் மாவட்ட அமைப்பு வணங்குகிறது; வாழ்த்துகிறது.

புதன், 14 ஆகஸ்ட், 2019

அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது!

நாடு முழுவதும் வரும் 15ம்தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது பிளாஸ்டிக் கொடி தோரணங்கள், தனி பிளாஸ்டிக் கொடிகள், ஆடையில் அணிந்துகொள்ளும் பிளாஸ்டிக் கொடிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் 1ம்தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைத்து துறைக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 15ம்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காகிதம், துணியால் ஆன கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் அவற்றை சாலையோரங்களில் வீசிவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர தனியார் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் பிளஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.