சனி, 12 அக்டோபர், 2019

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு-ஊதியம் நிர்ணயம் செய்தல் தெளிவுரைதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள் 11.10.2019




NISHTHA - introduction guide

சாலச்சித்தி school external evaluation dashboard

*அக்டோபர் 12,-வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

*🌷அக்டோபர் 12

, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.தமிழ்மொழியை செம்மொழி என்று இந்திய அரசு  அறிவித்த தினம் (2004)*

*2.*இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம்.*

--------------------------------------------

 *🌷தமிழ் மொழியை  செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்த தினம் இன்று (2004).*

*ஒரு மொழி .. செம்மொழியாவதற்கு:*

*1.1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள்* *பதிவுபெற்ற வரலாறு.*
*2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய* *பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதப்படும் இலக்கிய நூல்கள்.*
*3. அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழி குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட*

*இந்த 3 தகுதிகளை உடைய மொழிகளையே செம்மொழி என்கின்றனர்.*

*மேலும்,  செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.*

*1. தொன்மை*
*2. தனித்தன்மை*
*3.பொதுமைப் பண்பு,*
*4.நடுவு நிலைமை,*
*5.தாய்மைத் தன்மை,*
*6.மொழிக்கோட்பாடு,*
*7.இலக்கிய வளம்,*
*8.உயர் சிந்தனை,*
*9.பண்பாடு, கலை,*
*10.பட்டறிவு*
*11.வெளிப்பாடு*
*ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.*

*இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.*

*தமிழ்,செம்மொழியே என*
 *முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்.*

*தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.*

*அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர்.*

*தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன.*

*மேலும்,  மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர்.*

*பல்லாண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு தமிழ் மொழியை  செம்மொழி என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்டோபர் 12இல் தமிழ் செம்மொழி என அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.*
-----------------------------------------------
*🌹இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.*

*🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற* *ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,*

*இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு* *செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை* *ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து* *அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.*
*புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும்.* *அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்*
*தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.*

*டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.*
-----------------------------------------------

வெள்ளி, 11 அக்டோபர், 2019

*அக்டோபர்-11 வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 11, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.சர்வதேச பெண்குழந்தைகள்   தினம்.*

*2.உலக முட்டை தினம்.*

--------------------------------------------

*👩‍💼சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.*

*உலகில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க, முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த தினத்தை கொண்டாட ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.*
----------------------------------------------

*🥚🍛உலக முட்டை:தினம் இன்று.*

*சர்வதேச முட்டை ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள்.*

*முட்டையை .அவித்தோ , பொரித்தோ சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.*

*கிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.*

*ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எவ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இந்டத கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும் . சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.*

*உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.*
*தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம்.*

*உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை.*

*முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள்.* *பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.*
*அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள்.*


*“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது*

*சராசரியாக ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் இருப்பதுடன், தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கான அயோடினும் அதிகமுள்ளது. மேலும், பல்கள், எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம், கொழுப்பு, புரதச்சத்து உள்ளிட்ட அனைத்து வகை ஊட்டச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.*

*இதயத்துக்கு பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் "பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன. இத்தகைய ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையை தினமும் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறன் அதிகரிப்பதாக அமெரிக்க முட்டைச் சத்துணவு மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.*

*இத்தகைய மகத்துவம் மிக்க முட்டை உருவாகும் விதம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிக்கலானதும் ஆனால், சீரானதுமான அமைப்புடைய முட்டைகள் கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் உருவாகிறது.*

*கோழிக்கு இடப்புறத்தில் திராட்சை பழக்கொத்துப் போன்று ஒரேயொரு கருப்பையே உள்ளது (சில நாட்டுக் கோழிகளுக்கு மட்டும் இரு கருப்பைகள், முட்டைக் குழாய்கள் உண்டு). இந்த முட்டை உற்பத்தி நடைமுறை இரண்டே முக்கால் மணி நேரத்தில் நடைபெறுகிறது. முட்டையிட்டு ஒரு மணி நேரத்தில் மற்றொரு மஞ்சள் கரு ம

வியாழன், 10 அக்டோபர், 2019

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும் தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறை யால் வெளியிடப்பட்டுள்ளது



திருச்செங்கோடு மாவட்ட கல்வி அதிகாரி ( பொ) நியமனம் - Namakkal CEO



*அக்டோபர் 10 -வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.

*🌷அ

க்டோபர் 10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.உலக மனநல  தினம்.*

*2.உலக மரண தண்டனை எதிர்ப்பு  தினம்.*

----------------------------------------------

*🌹உலக மனநல தினம் இன்று.*


*உலக மனநல மையம்  சார்பில் 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.*


*இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.*

----------------------------------------------

*➰➰உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் இன்று.*

*உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.*

*மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.*

*மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.*

*2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.*

*மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.*

*மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,  அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.*

*தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,  கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,  தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,  நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.*

*கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.*

*மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.*
----------------------------------------------

புதன், 9 அக்டோபர், 2019

மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்





          தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்


Natinal Health Insurance 2016 என்ற TNNHIS2016 App

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது

 Click here....

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

*அக்டோபர்-9,வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

**🌷அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம்.*

*2.உலக அஞ்சல் தினம்.*

*3.தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம் பிறந்த தினம்.*

---------------------*🌏அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
--------------------------------------------------

 *🔥விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம் இன்று.*

*இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான்* *பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.*
*ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து,* *எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர்* *சே குவேரா.*
*அவர் இயற்பெயர்* *எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல்* *என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.*
*அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து* *பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.*
*முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,*
*பின் மருத்துவ கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென்* *அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.*
*காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.*
*அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.*

*பொதுவாக தென்* *அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு* *வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த* *அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.*
*கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய* *நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும்* *செல்வம் கரும்பும்  சீனியும்.*
*நான் இரும்பு மனிதன்,* *எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.*
*அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை* *இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக்* *காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.*
*ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய* *அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும்* *மக்கள் சக்திமுன் என்ன செய்ய?*
*ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ,* *சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.*
*பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை.* *உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என* *சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.*
*ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது* *ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.*
*ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு* *தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம்* *பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.*
*இந்த காலகட்டத்திற்குள் சேவினை காணாத* *அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,*
*ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".*

*மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.*

-----------------------------------------------------------------------------------