ஞாயிறு, 14 மார்ச், 2021

நீட் தேர்வு 2021 - தேதி அறிவிப்பு... NEET EXAM 2021 - DATE ANNOUNCED...

நீட் தேர்வு 2021 - தேதி அறிவிப்பு...

 NEET EXAM 2021 - DATE ANNOUNCED...


*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்களும்,அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.*

*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்களும்,அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.*



*🗳️அஞ்சல் வாக்குச் சீட்டு படிவங்கள்.

அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது பற்றிய முறைகளும் பற்றிய குறிப்புகள்.

ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் தேர்தல் கால குறிப்புகள்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,நாமக்கல் மாவட்டம்(கிளை).

அன்பானவர்களே!வணக்கம்

சட்டமன்றப்பொதுத்
தேர்தல் -2021 இன் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் பணி சிறப்புற அமைந்து சனநாயகம் முழுவெற்றி பெற்றிடும் எனும் நம்பிக்கைக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும்  குமாரபாளையம்,
திருச்செங்கோடு,
இராசீபுரம்,
சேந்தமங்கலம் ,நாமக்கல் மற்றும் ப.வேலூர் பயிற்சிமுகாமில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் ,
மன்ற
முன்னோடிகள் தங்களுக்குள் சந்தித்து கலந்துப்பேசி ,
ஒருமித்த முடிவெடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பின் பொறுப்பு அலுவலர் மற்றும் சட்டமன்றத்தொகுதி  தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கோரிக்கைகளை வலுவாக வலியுறுத்துங்கள்.
ஆசிரியப்பெருமக்களுக்கும்,அரசு ஊழியர் பெருமக்களுக்கும் கோரிக்கையின்  நியாயத்தை வலியுறுத்துங்கள்.
ஒற்றுமைப்படுத்துங்கள்.

1)கொரோனாகால நிலையான வழிமுறைகளின் படி பயிற்சி வகுப்பறைகள் இருத்தல் வேண்டும்.
வெப்பமாணி,
கைகழுவும் திரவம்,
சமூக இடைவெளியுடன் இருக்கை வசதிகள் ,காற்றோட்டமான வகுப்பறை ,முக உறை,
ஒரு டீம் ஒரு  தனித்தாளில் வருகைப்பதிவினை  செய்திடும் வகையிலான ஏற்பாடுகள் போன்ற இவைகளை முதலில் பயிற்சி வகுப்பறையில் இருப்பதை  உறுதிப்படுத்திடக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் வலியுறுத்திக் கோருங்கள்.

2)தூய்மையான-
பாதுகாப்பான குடிநீர் வசதிகள், 
கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தப்பட்ட சுகாதாரமான தேவைக்கேற்ற  எண்ணிக்கையிலான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்திடுமாறு கோருங்கள்.

3)பயிற்சி வகுப்பில் சிறு, சிறு இடைவேளைகள்  தந்து  தேநீர்,ரொட்டிகள்,பழச்சாறுகள் போன்றன பங்கேற்றுள்ள அலுவலர்கள் அனைவருக்கும் கூட்ட நெரிசல் இன்றி வழங்கப்படல் வேண்டும் என்பதைக்கோருங்கள்.

4)முழுநாள் பயிற்சி வகுப்பு என்பதை மறுபரிசீலினை செய்திடுமாறு  கோருங்கள்.
மதியநேரத்திற்கான தரமான உணவிற்கான ஏற்பாட்டினை கோருங்கள்.

5)இவைகள் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது,முதன்மையானது  அஞ்சல் வாக்குச்சீட்டுக்கான கோரிக்கையாகும்.
இதற்கான ஏற்பாடுகள் என்ன?என்பதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்து ,அந்தப் பணிகளை சிறப்பானத் தாக்கிடுமாறு கோருங்கள் . ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்துள்ள ஏற்பாட்டை விளக்கிச்சொல்லியும்,தெரிவித்தும்  எல்லோரும்  அஞ்சல் வாக்குச்சீட்டு பெற்று வாக்குச்செலுத்தும் சனநாயகக்கடமைக் கான பணிகளை எடுத்துரையுங்கள்.
நூறு சத அஞ்சல் வாக்குப்பதிவு என்பதை உறுதிப்படுத்திடுமாறு வேண்டுகோள் வையுங்கள்.

6)தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கண்ணியத்துடன்,
மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

7)ஏதேனும்,சந்தேகம் ,
அச்சம் ஏற்படின், விளக்கம்தேவைப்படின்   மாவட்டச்செயலாளர்
,மாநிலச்செயலாளரை தொடர்புக்கொள்ளுங்கள்.
நன்றி!

இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை)

வியாழன், 11 மார்ச், 2021

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் நிதிமுறைகேடுகளை எதிர்த்து 17.03.2021 அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கோரிக்கை மனு இயக்கம் வெற்றிகரமாக நடந்தேறியது!
++++++++++++++++++++
அன்பானவர்களே! வணக்கம்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறைப்படுத்தி சங்கத்தினை- சங்க உறுப்பினர்களை பாதுகாத்திடுதல், 
நிதிஇழப்புத் தொகையினை சங்கச் செயலாளரிடம் இருந்து முழுமையாக வசூல் செய்திடுதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக கூட்டுறவுத்துறையும் நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த 06.03.2021 அன்று ஏழுகட்டத்தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் , நாமக்கல் மாவட்ட அமைப்பு அறிவித்தது.

இதனடிப்படையில் ,
10.03.2021அன்று 
தமிழ்நாடு தலைமைத்தேர்தல் ஆணையாளர்,
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அரசு முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவுப்பதிவாளர்,நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்,
நாமக்கல் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர், எருமப்பட்டி கூட்டுறவு சிக்கன நாணயச்சங்க நிர்வாகக்குழுத் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கம் நடைபெறுகிறது.
சுவரொட்டியை தயாரித்து , தேவையெனில் தேர்தல் ஆணையத்தின்  அனுமதிப் பெற்று மாவட்டம் முழுதும் சுவரொட்டி இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திடுவதற்கு மாவட்ட அமைப்பு பணிகளை தொடங்கி உள்ளது.

கூட்டுறவுச் சங்கம் காக்கும் ஏழுக் கட்டத் தொடர்நடவடிக்கைகளுக்கும்  அனைத்து தரப்பினரின் ஆதரவினையும் மாவட்டமைப்பு வேண்டுகிறது.
நன்றி!

-மெ.சங்கர்.

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - EPIC இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்!!!*

*🗳️தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து பிரிவு ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.*

*🗳️தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து பிரிவு  ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அரசிதழில் அறிவிக்கை  வெளியிட்டுள்ளார்.*

*🗳️வாக்களிப்பு மையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்:*

*🗳️வாக்களிப்பு மையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்:*

தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப். 30க்குள் நடத்த உத்தரவு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு கூகுள் டூடுல் மரியாதை...

தஞ்சை அருகே ராஜராஜசோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு...