வியாழன், 28 அக்டோபர், 2021

செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!மாணவரின்‌ உயர்கல்வி செலவினை தமிழ்நாடு ‌அரசு ஏற்கிறது!

செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!
மாணவரின்‌ உயர்கல்வி செலவினை தமிழ்நாடு ‌அரசு ஏற்கிறது!

எட்டாம்வகுப்பு தனித்தேர்வு:29.10.2021 முதல் ஹால்டிக்கெட்.

எட்டாம்வகுப்புத் 
தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் 
நாளை(29.10.2021) வெளியீடு
++++++++++++++++++++
நவம்பர் மாதம் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


''08.11.2021 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்புத் தனித் தேர்வை எழுத அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறை:

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால்
 ESLC - NOVEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கீடு தாள் கொடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில்  ஊதியம் கணக்கீடு தாள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். jacto geo strike period calculator click here -

ஆசிரியர் ஆய்வுக்குழு இரத்து!நாமகிரிப்பேட்டை ஆசிரியர்மன்றம் வரவேற்பு!


 

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹ 15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆணை



 

இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் பயிற்சி



 

ரேசன் கடைகளுக்கு 06.11.2021 அன்று பொது விடுமுறை!


 

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.













 

வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதால் திருத்திய தகுதிகாண் பருவம் /தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை வழங்கும் பொருட்டு இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!



 

புதன், 27 அக்டோபர், 2021

மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்று தொடக்கம்: மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

Join us live on the ILLAM THEDI KALVI inauguration by the Honorable Chief Minister of Tamil Nadu live at 04:30 PM today!

Link on Facebook - illamthedikalvi.tnschools.gov.in/fblive
Link on YouTube - illamthedikalvi.tnschools.gov.in/ytlive
Link on Twitter - twitter.com/SEDTamilNadu


மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்று தொடக்கம்: மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் (எஸ்எஸ்ஏ) சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் இரா.சுதன், கூடுதல் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் நேற்று விவரித்தனர். அப்போது சுதன் கூறியதாவது:

குழந்தைகளின் கற்றல்இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ‘இல்லம் தேடி கல்வி’திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் மகிழ்ச்சியான முறையில் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.

இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்றஇணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதுவரை 44 ஆயிரம் பெண்கள் உட்பட 60 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.

சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி, நீலகிரி,மதுரை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறும்போது, ‘‘மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்27-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.