புதன், 10 நவம்பர், 2021

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள்


 Click here for download pdf

நாமக்கல் மாவட்டத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு! மின்தடை நாள் மற்றும் இடங்களின் விபரம் அறிவிப்பு!



 

2017ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ! டிசம்பர் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது!


 

துணைத்தேர்வு ஒத்திவைப்பு - TNPSC


 

மழை பாதிப்பு பகு‌திகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு






 

மாணவர்களுக்கு பேச்சு போட்டி - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள்




 

Namakkal rainy 🌧 paper news 10.11.2021










 

ஆசிரியர் மன்றத்தின் திறந்த மடல்!       

 ஆசிரியர் மன்றத்தின் திறந்த மடல்!        ++++++++-+++++++++++++++ 

 அன்பானவர்களே ! வணக்கம். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு வகையிலான அடக்குமுறைகளை , ஒடுக்குமுறைகளை , ஊதிய இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இழப்புகளை சந்தித்து உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி! பாராட்டு! வாழ்த்து! மிக அண்மையில் தமிழ்நாடு அரசு மேற்கண்ட பாதிப்புகளை எல்லாம் களைந்திடும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உள்ளது. வேலை நிறுத்த நாள்களை பணிக்காலமாக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. இவ்வரசாணையின் படி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரான வட்டாரக்கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணிப்பதிவேடுகளைக் கொண்டு ஒவ்வொருவரின் பாதிப்புகளையும் களைந்து பணப்பயன்கள் உள்ளிட்டு இதரப்பலன்களை விரைந்து வழங்கிடல் வேண்டும். பணிக்கால ஆணைகளை வழங்கிடல் வேண்டும். தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில் /பல்வேறு ஒன்றியங்களில் பாதிக்கப்பட்டோரின் கடிதம் ஏதும் பெறாமலேயே பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பணிக்கால ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் இப்பணியில் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் தேக்க நிலை - தொய்வுநிலை காணப்படுகிறது. இதை மூடிமறைத்துக் கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்டோர் இந்த நாளில் விண்ணப்பம் தாருங்கள் என்று வட்டாரக்கல்வி அலுவலர்களால் அறிவிப்பு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கு பணிக்கால ஆணைகள் மற்றும் பணப்பலன்கள் தரப்படவில்லை என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநிலத்தின் உயர் அலுவலர்கள் இடத்தில் முறையீடு செய்தால் சம்பந்தப்பட்டவர் 10.11.2021 இல் தான் விண்ணப்பம் அளித்தார் என்றோ , இதுவரையிலும் விண்ணப்பம் செய்துக் கொள்ளவில்லை என்று காட்டிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்களது செயல்பாடற்ற நிலையினை மூடிமறைத்துக் கொள்வார்கள். தப்பித்துக் கொள்வார்கள். பாதுகாத்துக் கொள்வார்கள். வேலை நிறுத்த போராட்டக்காலத்தில் , நாமக்கல் மாவட்டம் சார்ந்த அனைத்துக் கல்விஅலுவலர்களும் , அலுவலகப் பணியாளர்களும் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கினார்கள் என்பதை மட்டும் ஒரு வினாடி நினைத்துப் பாருங்களேன். மத்திய சிறையில் இருப்போருக்கு சிறைக்குள் தற்காலிக பணிநீக்கம் ஆணை வழங்கிய சூரத்தனம்‌ வேறு எந்தவொரு மாவட்டத்திலும் காணமுடியாத , கேட்க இயலாத நாமக்கல்லில் மட்டுமே கேட்ட- கண்ட காட்சியாகும். சிறைச்செம்மல்களின் வீடுகளைக்கண்டறிந்து தேடிப்போய்- ஓடிப்போய் வீட்டில் உள்ளோரிடம் ஆணைகள் வழங்கிட முயற்சித்தோர் இவர்கள். வீடுகளின் சுவர்களில் பணிநீக்க ஆணைகளை ஒட்டுவோம் என்று அச்சுறுத்தியவர்கள் இவர்கள். இத்தகு சின்சியாரட்டியை வேறெதிலும் இதுவரையிலும் வெளிப்படுத்திடாத சிகாமணிகள் இவர்கள். ஏனெனில், இலஞ்ச -இலாவண்யத்தில், ஊழலில் ஊறித் திளைப்பதை விடவும் மிகக்கொடுமையான செயலில் ஈடுபட்டவர்கள் அல்லவா?! சிறைக்குள் இருப்பவர்கள். சிறைக்குச் சென்ற‌வர்கள். எல்லோரின் கோரிக்கைக்காகவும் சிறை புகுந்த சிறைச்செம்மல்களை இவ்வாறு எல்லாம் சிறப்புச் செய்தவர்கள் இவர்கள். இந்த சிறப்பை இன்று வரையிலும் செவ்வனே ஆற்றுபவர்கள் இவர்கள். நல்லது செய்வதும் போலவே தேன்ஒழுக- பால்ஒழுக அலைப்பேசியில். பேசிப் பேசியே அலுவலகத்திற்கும், பள்ளிக்கு எளிதாக வரவழைத்து நைசியமாக அறிவிப்புக்கடிதத்தை உட்கார்ந்த இடத்தில் இருந்தே விநியோகம் செய்த சூரப்புலிகளில் அதிகமானோர் நாமக்கல் மாவட்டத்தில் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். இவர்களோடுதான்‌ நாம் கம்பீரமாகவாழ்கிறோம். பணிஆற்றுகிறோம். இப்படிப்பட்ட அலுவலர்கள் தான் இப்போது எவ்வளவு மெல்லமாக அட்டைப்பூச்சியாக, நத்தைப்பூச்சியாக ஊர்கிறார்கள் பாருங்களேன். ஆசிரியர்களின் நண்பர் யார்? பகைவர் யார்? என்பது தெளிவானதே. நாமக்கல் மாவட்டம் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தமிழ்நாட்டின் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி பெற்றுள்ள அரசாணை எண்:113, மனிதவள மேம்பாட்டுத்துறை, நாள்:13.10.2021 ஐ முழுமையாக விரைந்து நிறைவேற்றிடல் வேண்டும். இவ்வரசாணையை நிறைவேற்றுவதில் எவ்விதமான‌‌ சுணக்கமும் கொள்ளல் கூடாது. மேற்கண்ட‌ அரசாணையை அமல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுமேயானால் மேல்முறையீடுகளுக்கும் , போராட்ட நடவடிக்கைகளுக்கும் நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியப் பெருமக்களைத் தள்ளிவிடும் வரலாற்றுப் பிழைக்கும் நாமக்கல் மாவட்டம் சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலர்களும், அலுவலகப் பணியாளர்களும் முழுப்பொறுப்பேற்க வேண்டியவர்கள் ஆவர்‌ என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறது.


கனமழையால் பள்ளி மற்றும்‌ கல்லூரிகளுக்கு 9மாவட்டங்களில் இரண்டு நாள்கள் (10,11 நவம்பர்) விடுமுறைஅரசாணை வெளியீடு! மற்ற மாவட்டங்களில் ஆட்சியர் முடிவு எடுக்க உத்தரவு!


 

அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25சதம் ஒதுக்கி அரசாணை வெளியீடு!.