ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கொரோனாநுண்கிருமி இமாலய வேகத்தில் பாய்ந்து பரவி வருகிறது! கொரோனா பரவல் வேகக் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைத்திடுங்கள்! தமிழ்நாடுபள்ளிக்கல்வி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌கோரிக்கை!


 

மனமொத்த மாறுதல் ஆணைகளை பொதுக் கலந்தாய்வுக்கு முன்னரே வழங்கிடல் வேண்டும்! மனமொத்த மாறுதல் ஆணை பெறும் ஆசிரியர்களின் பணிசேரும் நாள் , பணியிட மூப்பு ,பணி மூப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாகாது!


 

கொரானா பரவலைக் கருத்தில் கொண்டு 10.01.2022 முதல் நடைபெறவுள்ள திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

ஆசிரியர்களுக்கான 2021-2022 ம் ஆண்டிற்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு நாளிதழ் செய்தி


 

ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு திறன் வழுவூட்டல் பயிற்சி கையேடு


 Click here for download pdf

அறுபது வயது கடந்த மூத்தோர்களுக்கு (senior citizens) கொரோனா பாதுகாப்பு! ஒன்றிய அரசின் அறிவுரைகள்!





 

ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு திறன் வழுவூட்டல் பயிற்சி சார்ந்து நாமக்கல் மாவட்ட CEO Proceedings



 

சனி, 8 ஜனவரி, 2022

முழுஊரடங்கில் 09.01.2022 அன்று என்ன என்ன செய்யலாம்?என்ன என்ன செய்யக்கூடாது?

முழுஊரடங்கில் 09.01.2022 அன்று 
 என்ன என்ன செய்யலாம்?என்ன என்ன செய்யக்கூடாது?

ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் கிடைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. 

இதையடுத்து, ஒவ்வொரு பதவி நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உத்தரவுகள், ஆன்லைன் வழியில் இறுதி செய்யப்பட உள்ளன. விருப்பமான இடங்களை ஆசிரியர்களே தேர்வு செய்யும் வகையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளதால், ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதிகம் விரும்பும் காலியிடங்கள், நிர்வாக மாறுதலால் பூர்த்தியாகி விடாமல் இருக்கும் வகையில், நிர்வாக இடமாறுதல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. கவுன்சிலிங் முடிந்த பின், நிர்வாக மாறுதல் உத்தரவுகளை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நியாயவிலைக் கடைகள் 09.01.2022 அன்று செயல்படாது!

நியாயவிலைக் கடைகள் 09.01.2022 அன்று செயல்படாது!