வெள்ளி, 9 ஜூன், 2023

🕹️CRC - Postponed - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

🕹️CRC - Postponed - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

1. அறிவிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு வெளிப்படுவது எழுத்து. ஆனால் மனதின் ஆழத்திலிருந்து உணர்வு நிலைகளை வெளிப்படுத்துவது உரையாடல்.

2. சிந்தனைகள் ஒருவரை பற்றி புரிந்து கொள்வதற்கும் அவருடைய சிந்தனைகளை எண்ணங்களை உணர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கும் மிக முக்கியமான கருவி.

3. உரையாடும்போது அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றது. 

4. எந்த வயதினராக இருந்தாலும் உரையாடல் அவர்களின் மனதை தொடுகிறது.

5. உரையாடல் வழியே கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதித்து அதை சரியான திசைவழியில் மாற்ற முடியும்.

6. உரையாடல் ஒருவரை ஆற்றுப்படுத்துகிற அற்புதமான மருந்து.

7. குழந்தைகளிடம் உரையாடுங்கள். மனம் திறந்து உரையாடுங்கள். அவர்களுக்கு புரியுமா புரியாதா என்று யோசிக்காமல் உரையாடுங்கள்.

8. குழந்தைகளுக்கு உரையாட இடம் தாருங்கள். அவர்கள் பேசும்போது கவனமாக கேளுங்கள். குழந்தைகள் உரையாடும்போது அவர்களை தொட்டுப் பேசுங்கள். அது ஒரு நெருக்கமான உணர்வை குழந்தைகளிடம் தோற்றுவிக்கும்.  அவர்கள் உயரத்திற்கு உங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

10.  குழந்தைகள் உரையாடும்போது இடையில் குறுக்கீடு செய்யாதீர்கள். அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். அத்தகைய முகமொழியும் உடல் மொழியும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களுடைய சரி தவறுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

11. நீங்கள் அப்படி உடனடியாக குறுக்கிடும்போது குழந்தைகள் தங்கள் உரையாடலை தணிக்கை செய்ய தொடங்கி விடுவார்கள் அல்லது எதை சொல்ல வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.

12. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.

13. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசாதீர்கள்.

14. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதால் அவர்கள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் எப்படி உள்வாங்குகிறார்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் உரையாடும்போது நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

15. குழந்தைகளுக்கும் உலக அனுபவம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

16.  உலகம் பற்றிய உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை அற உரைகளை நன்னெறிகளை குழந்தைகளிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள்.

17. குழந்தைகள் முன்னால் நீங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள் குழந்தைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

18. குழந்தைகள் சொற்களை அல்ல. செயல்களையே உடனடியாக புரிந்து கொள்கிறார்கள்.

19. உரையாடும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் உரையாட வேண்டும். அவர்கள் தவறான விஷயங்களை மதிப்பீடுகளை கொண்டிருந்தால் அதை அவர்கள் உணரும்படி கதைகள் வழியாக உரையாட வேண்டும்.

20. குழந்தைகளுக்குத் தேவை கைகாட்டிகளே. யாராலும் குழந்தைகளின் விரல் பிடித்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அழைத்து ச் செல்ல முடியாது.

21. இந்த உலகைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் மட்டுமே சரியான விஷயங்களை உரையாடும் போது குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

22. குழந்தைகளிடம் உரையாடுவோம்.

-எழுத்தாளர் உதயசங்கர்

வியாழன், 8 ஜூன், 2023

தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தும் எண்ணும்.... எழுத்தும்... வகுப்பறைகளை எவ்வாறு பிரிப்பது?

தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தும் எண்ணும்.... எழுத்தும்... வகுப்பறைகளை எவ்வாறு பிரிப்பது?

✍️நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு.

✍️நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு.

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை!-மின்வாரியம் தெரிவிப்பு

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை!
-மின்வாரியம் தெரிவிப்பு

DEO PROMOTION - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்புதமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.07.06.2023

DEO PROMOTION - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.07.06.2023

புதன், 7 ஜூன், 2023

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்புப் பணி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்புப் பணி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பயிற்சி வட்டார அளவில் 10.06.2023 நடைபெறுதல் - தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பயிற்சி வட்டார அளவில் 10.06.2023 நடைபெறுதல் - தொடர்பாக.

அரசு ஆணை எண் 165/Finance (Pension) Dept.dated31.05.2023 ன்படி 01.07.2023 முதல் ஆண்டு முழுவதும் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

அரசு ஆணை எண் 165/Finance (Pension) Dept.dated 31.05.2023 ன்படி 01.07.2023 முதல் ஆண்டு முழுவதும் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

நாமக்கல் மாவட்ட அமைப்பின் சிறப்புச் செயற்குழுக்கூட்டத் தீர்மானம்! - நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முறையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்புபெரிதும் வரவேற்கிறது!

நாமக்கல் மாவட்ட அமைப்பின் 
சிறப்புச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம்!

தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு முடிவான பதிலுரை அளிப்பதற்கு 
நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு  (தொடக்கக்கல்வி) கடிதம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முறையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு
பெரிதும் வரவேற்கிறது!