சனி, 30 ஜூன், 2018
வெள்ளி, 29 ஜூன், 2018
வியாழன், 28 ஜூன், 2018
125 ரூபாய் நாணயம் வெளியீடு...
புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஜூன் 29 வெளியிடுகிறார்.
கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் நாளை மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.
புதன், 27 ஜூன், 2018
செவ்வாய், 26 ஜூன், 2018
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஆகும்.
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக, மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.
இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும்.
ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியீடு...
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுகளை www.ideunom.ac.in இணையதளங்களில் பார்க்கலாம்...
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் ~ CEO க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்…
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.
தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.
அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன.
அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது
இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்.
மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன.
இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.
அரசாணை இணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.
இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள், 25 ஜூன், 2018
"Biometric Attendance" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance...
பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.
அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'TN Attendance ' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.
மேலும் பாடப்புத்தகத்தில் 'QR Code ஐ' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரோபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன என்றார்.
ஞாயிறு, 24 ஜூன், 2018
திங்களன்று(25-06-18) நாமக்கல்லில் கண்டன ஆர்பாட்டம்...
அன்பானவர்களே!வணக்கம்.
திங்களன்று நாமக்கல்லில் கண்டன ஆர்பாட்டம்
***********************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் 25.06.2018( திங்கள்) பிற்பகல் 05 .00 மணியளவில் நாமக்கல் பூங்காசாலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.உசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது...
நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள், ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
~முருகசெல்வராசன்.
TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசனில் நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?
மாணவர்களின் வருகை தற்போது TN schools Attendance என்ற ஆப்ஸ் ல் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவே மாணவர்களின் மாதாந்திர அறிக்கை தயார் செய்து கொள்கிறது.
அதற்கு...
1. Play store ல் TN schools Attendance என்ற ஆப்ஸ் ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
2. அதனைopen செய்து நம்முடைய பள்ளியின் EMIS number user ID யாகவும், EMIS password பாஸ்வேர்ட் ஆகவும் கொண்டு நம் பள்ளியை open செய்யவும்.
3. இப்பொழுது student attendance என்ற ஒரு பகுதியாகவும் monthly report என்ற ஒரு பகுதியாகவும் தோன்றும்.
4. Student attendance என்ற பகுதியை தொட்டால் வகுப்புகள் வரும்.
5. அதில் ஒவ்வொரு வகுப்பாக தொட்டால் அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் வரும்.
6. பெயர் பட்டியலில் அனைத்தும் வலது பக்கத்தில் P என இருக்கும். P என்பது மாணவர்களின் வருகை குறிக்கும்.
7. எந்த மாணவர் வரவில்லையோ அந்த மாணவருக்கு உரிய P ஐ தொட்டால் A என வரும் அது absent ஆகும்.
9. இதனை சிறப்பாக சரியாக துள்ளியமாக செய்து submit கொடுத்தால் அந்த வகுப்பு attendance online ல் ok.
10. இதேபோல் மற்ற வகுப்புகளுக்கும் செய்து submit கொடுக்க வேண்டும். இப்பொழுது ஆன்லைனில் மாணவர்களின் வருகை ஏற்றப்பட்டு விட்டது.
11. அடுத்து monthly report தொட்டால் அந்தந்த மாணவர்களின் வருகை சராசரி வருகை வந்து இருக்கும்.
12. EMIS பெயர் இனிஷியல் அனைத்து மாணவர்களுக்கும் சரியாக ஏற்றி இருக்க வேண்டும்.
13. இது ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் சரி பார்க்கப்படும். அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டியுள்ளது. செய்க.
Click here for App....
BHARAT RATNA DR. A.P.J.ABDUL KALAM AWARD – APPLICATIONS INVITED – LAST DATE 10TH JULY 2018!
அப்துல்கலாம் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...
விஞ்ஞான
வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 'அப்துல் கலாம் விருது' வழங்கப்படுகிறது.
இவ்விருது, சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும். விருது பெறுபவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காசோலை, எட்டு கிராம் தங்கப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் தரப்படும்.
விருது பெற விரும்புவோர், சுயவிபரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்,
அரசு முதன்மை செயலர், உயர் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 600009.
என்ற முகவரிக்கு ஜூலை, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.'
விருது பெற தகுதியான நபரை, தமிழக அரசு நியமித்துள்ள தேர்வுக் குழு முடிவு செய்யும்' என, உயர் கல்வித்துறை முதன்மை செயலர், சுனீல் பாலீவால் அறிவித்துள்ளார்.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செல்போன் மூலமாகவே எளிமையாக இணைக்கலாம்!
இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தி வைத்துள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்து கொடுத்தது.
அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
அந்த இணைப்பில் வருமான வரி செலுத்துவோர் சென்று, தங்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே போதுமானது. சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றில் உள்ள சிறிய பெயர் மாற்றங்களும் இதில் தாமாக சரிசெய்யப்பட்டு விடும்.
Link:
குறுஞ்செய்தி வசதி:
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, செல்லிடப்பேசியில்UIDPAN என்று டைப் செய்து இடைவேளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவேளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)