திங்கள், 31 மே, 2021

தேசிய நல்லாசிரியர் விருது ஜூன் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் _ மத்திய அரசு அறிவிப்பு



 தேசிய நல்லாசிரியர் விருது:

 நாளை (01/06/2021) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி, விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.


இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆர்.சி.மீனா இன்று அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும்/ செயலாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ''ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற நாளை (ஜூன் 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 20 ஆகும்.


ஆசிரியர்கள் கூடுதலாகப் பங்கேற்கும் வகையில் மாநிலங்கள் விருது குறித்த அறிவிப்பைப் பரவலாக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியது. கரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நன்றி :  இந்து தமிழ்

வெள்ளி, 28 மே, 2021

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை: சரக்கு விமான சேவைக்கு தடையில்லை: மத்திய அரசு அறிவிப்பு



 

மருத்துவர்கள் மற்றும் நோய்த்தடுப்பு ‌பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை- தமிழ்நாடு ‌அரசு ஆணை!

 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு


ஆங்கில முறை மருத்துவர்களுக்கு ரூ.30,000, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை


பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை



தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு



 தமிழகத்தில் பொது முடக்கம்!

31.05.21 முதல் 07.06.21

வரை தளர்வுகளற்ற‌ ஊரடங்கு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தியாகச் செம்மல் பெரியவர் அய்யா டி.எம்.காளியண்ணன்‌ அவர்களுக்கு புகழ் வணக்கம்.



 தியாகச் செம்மல் பெரியவர் அய்யா டி.எம்.காளியண்ணன்‌ அவர்களுக்கு புகழ் வணக்கம்.

*********************************


பாபு ராஜேந்திரபிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசனசபையில் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகித்தார்கள். சட்டவிதிகளை, டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வல்லுநர்கள் குழு வரையறை செய்தது. அரசியல் சாசனம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று ஏற்கப்பட்டது. 

இது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று அமலுக்கு வந்தது.


1950ம் ஆண்டுமுதல் 1962ம் வருடம்வரை 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்த பெருமை பாபு ராஜேந்திர பிரசாத்துக்கே உரியது. வேறு எந்த குடியரசுத் தலைவரும் 5 ஆண்டுகளுக்குமேல் இப்பதவியை வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேச விடுதலைக்காக, மகாத்மா காந்தி ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற மகத்தான தலைவர்களின் அடிச்சுவட்டில் பயணித்த எண்ணற்ற தொண்டர்களில் ‘டி.எம்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.காளியண்ணன் கவுண்டரும் ஒருவர் ஆவார்.


சென்னை ராஜதானி சார்பில் அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்தவர்களில், சேலம் குமாரமங்கலம் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் மட்டுமே, 99 வயதான நிலையிலும், உடல் தளர்ந்தாலும் மனம் தளராமல் இப்போது இயங்கி வருகிறார் என்பது சிலாகிக்கத்தக்க சிறப்பம்சமாகும்.


சுதந்திரப் போராட்ட வீரரான அவர் தமிழ்நாடு காங்கிரஸ்  துணைத்  தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1952ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும் 1957 மற்றும் 1962ல் திருச்செங்கோடு தொகுதியிலிருந்தும் அவர் சென்னை மாகாண சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டமேலவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.


காளியண்ண கவுண்டர் – பார்வதி அம்மாள் தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள். வாரிசுகள் அனைவரும் உயர்ந்தோங்கியுள்ளனர்.


‘இந்தியன் வங்கி’ இயக்குநராகவும் திருச்சி ‘பெல்’ இயக்குநராகவும் காளியண்ண கவுண்டர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பும் லயோலா கல்லூரியில் எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) பட்டமேற்படிப்பும் படித்த காளியண்ண கவுண்டர் கல்வித் துறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட அவர் உறுதுணையாகச் செயல்பட்டார்.


தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு விழிகளாகக் கருதிய காளியண்ண கவுண்டர் அறச் சிந்தனை கொண்டவர். எண்ணற்ற கோவில்கள் கட்டவும் திருவிழாக்கள் நடத்தவும் அவர் நிதியை வாரி வழங்கியுள்ளார். இதனால், கொங்குவேள் என்ற கௌரவப் பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பாலங்கள் கட்டவும் சாலைகள் அமைக்கவும், அவர் முனைப்பு காட்டினார். ஈரோடு அருகேயுள்ள பள்ளிப்பாளையம் பாலம் அவரது பெருமையை இப்போதும் பறைசாற்றுகிறது. இதைப்போல கொல்லிமலைச் சாலையும் அவரது கீர்த்தியை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

(நன்றி:ஒரே நாடு இதழ்)


தியாகச் செம்மல் பெரியவர் அய்யா அவர்களின் மறைவு 

ஈடு செய்ய‌ முடியாத பேரிழப்பாகும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌ நாமக்கல் மாவட்ட‌ அமைப்பு மறைந்த பெரியவர் அய்யா‌ டி.எம்.கே.,அவர்களுக்கு புகழ்வணக்கம்‌ செலுத்துகிறது.

G.O Collections...

பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன் சார்ந்து...

தற்போது GPF மற்றும் CPS ஒருங்கிணைந்த விண்ணப்ப படிவம் உடன் கூடிய அரசாணை...

மற்றும் கருணை அடிப்படை பணி நியமனம் சார்ந்த ஒட்டுமொத்த அரசாணைகளின் தொகுப்பு...

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை ஆன்லைனில் பதிய வேண்டும் ~ பள்ளி கல்வித்துறை உத்தரவு...

புதன், 26 மே, 2021

தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோயுள்ள பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென தலைமைச் செயலக துறை செயலாளர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தல்.

 தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இணை நோயுள்ள பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென தலைமைச் செயலக துறை செயலாளர்களுக்கு தமிழக       


தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் உத்தரவு




 

கொரோனா முன்களப்பணியாளர்‌ கட்டாயப்பணியில் இருந்து ஆசிரியப் பெருமக்களை விடுவித்து பாதுகாத்திடுங்கள்! தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!

 கொரோனா முன்களப்பணியாளர்‌ கட்டாயப்பணியில் இருந்து ஆசிரியப் பெருமக்களை விடுவித்து பாதுகாத்திடுங்கள்!

தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!


----------------------------------------

கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் சீரியச் செயல்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும்‌ வரவேற்கிறது!பெருநன்றி பாராட்டுகிறது!


தமிழக அரசின்  ஊரடங்கு நடவடிக்கைகளுக்கும், சீரியச் செயல்பாடுகளுக்கு  ஆக்கப்பூர்வமான‌ வழிமுறைகளில்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  ஒத்துழைக்கிறது! ஆதரவளிக்கிறது!


தமிழ்நாட்டின் ஆசிரியப் சமுதாயத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையிலான‌ உணர்வு பூர்வமான‌,

மிக இணக்கமான நட்புறவினை பாழ்படுத்திடும்‌ வகையில் ,

சீரழித்திடும் வகையில், சிண்டு முடிந்து விட்டு வேடிக்கை காணும் மனநிலையில் 

ஒரு சில சக்திகளால்  அவ்வப்போது வெவ்வேறு வகையில்  வதந்திகள் பரப்பப்பட்டு தமிழ்நாட்டின் ஆசிரியப் பெருமக்கள் பெரும் பதட்டத்திற்கும்,

மன உளைச்சலுக்கும்  உள்ளாக்கப்படுவது பெருங்கவலை அளிக்கிறது


கொரோனாக்காலத்தில்  பள்ளி ஆசிரியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஏதாவது ஒருவகையில்   உள்ளாக்குவது சிறந்த செயலாகாது. இத்தகு விசமத்தனமான ‌நடவடிக்கைகளில் இருந்து பள்ளி ஆசிரியப்பெருமக்கள்  பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகின்றனர்.


இத்தகு நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கொரோனாத்தடுப்புப் பணியில் முன்களப்பணியாளர்களில் ஒருவராக பள்ளி ஆசிரியப்பெருமக்களை  வரையரைச் செய்துக்கொண்டு  கூடுதல் பணிக்கு நியமனம் செய்து இருப்பது  கடும் அதிருப்தி அளிக்கிறது.பேரதிர்ச்சி அளிக்கிறது.


கொரோனா பரவல் தடுப்புப் பணிகளின்‌ முன்களப்பணியாளர் கூடுதல் பணிகளில் இருந்து பள்ளி ஆசிரியப் பெருமக்களை முழுமையாக விடுவித்து ஆசிரியப்பெருமக்களை பாதுகாத்திடல் வேண்டும்.

 

தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியப்பெருமக்களுக்கு ஏற்ற பொருத்தமான‌‌ பணிகளில் சுய விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ பள்ளி ஆசிரியப் பெருமக்களை கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில்  ஈடுபடுத்திக்கொள்ளத் தக்க வகையில் அனைத்து மாவட்ட‌ ஆட்சித்தலைவர்களுக்கும் வழிகாட்டுதல் செய்து உதவிடுமாறு  தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌வேண்டுகிறது.

இவண்,

முனைவர்-மன்றம் 

நா.சண்முகநாதன்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.


புதுக்கோட்டை

25.05.2021

CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!! 👉👉👉