வியாழன், 6 டிசம்பர், 2018

வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் & டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்க வேண்டும்

வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டும்போது தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் போது அவர்கள் செய்யும் தவறுகளில் போக்குவரத்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது. 

மூன்று முறைக்கு மேல் ஒரே தவறை செய்யும் பட்சத்தில் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற விதிகள் இருந்தும் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பாக நவம்பர் 19ம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது என்றார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

பான் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்...


பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது.

பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. 

வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் கொண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.

🌷புதிய 5 விதிகள்...

1 )குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.

2) நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.

3) மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம். 

4 )கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை. 

5 )வங்கி கணக்கு துவக்கவோ,வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.

சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு...


ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றின் மீதான ஆட்சேபனைகளை தேர்வர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக டி.ஆர்.பி. சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு...

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும்10- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகிய துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன.
யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற தகுதியுடைய மாணவர்கள், உதவித் தொகையுடன் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். 
இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

பேச்சுத்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் சரி செய்ய முடியும் என்கிறது அறிவியல் தொழிற்நுட்பம்



ஒருவர் எதிரில் உள்ளவரோடு தொடர்பு கொள்ள பேச்சுத்திறன் பயன்படுகிறது. சிறந்த பேச்சாற்றல் உள்ளவர்களால் அதிக நண்பர்களைப் பெற முடியும். பேச்சாற்றல் மிக்கவர்கள் தனது துறையில் உச்ச வளர்ச்சியை எட்ட முடியும். அடுத்தவர் மனதை ஈர்க்கவும் இடம்பிடிக்கவும் பேச்சாற்றலே பயன்படுகிறது. ஒருவர் பேசும் போது உச்சரிப்பு, குரல் வளம், பேசுவதில் உள்ள தொடர்ச்சி, ஏற்ற இறக்கங்கள் மற்றும் அவர்களது மொழித்திறனும் சேர்த்தே ரசிக்கப்படுகிறது. இவற்றில் குறைகள் காணப்படும் போது அந்தப் பேச்சு யாராலும் விரும்பப்படுவதில்லை.

மேலும் பேச்சுக் குறைப்பாட்டினை வைத்தே ஊமையன், திக்குவாயன், செவிடன், உளறுவாயன் என்பது போன்ற பட்டப் பெயர்கள் வைத்து கேலி செய்கின்றனர். இது அவர்களது திறமைகளை மழுங்கடிக்கச் செய்து கேலிக்குரியவர்களாக மாற்றுகிறது. மேலும் இது அவர்களது மனதை புண்படுத்தி வேதனை அளிக்கிறது. ‘பேச்சுத்திறன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து அதை நம்மால் சரி செய்ய முடியும்’ என்கிறார் பேச்சுத் திறன் பயிற்சியாளரான வாசுகி விஜயகிருஷ்ணன். யாருக்கெல்லாம் பேச்சுக் குறைபாடுகள் ஏற்படும்?

அவற்றுக்கான தீர்வு என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார். ‘‘பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு எந்த வயதிலும் ஏற்படலாம். பிறவிக் குறைபாடுகளான காது கேளாமை, மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, உதடு மற்றும் அன்னப்பிளவு உச்சரிப்பு ஆகியவையும் ஒருவரது பேச்சுத்திறனை பாதிக்கிறது. பெரியவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், முகவாதம், திக்குவாய், குரல்வளம் பாதிப்பு, உணவு உட்கொள்வதில் மற்றும் விழுங்குவதில் ஏற்படும் பாதிப்புகளாலும் பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது.

விபத்தில் தலையில் அடிபட்டு பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்புக்குஉள்ளாகவும் வாய்ப்புள்ளது. ஒரு குழந்தை கருவில் உருவாகும்போதிலிருந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களைத் தாக்கும் எந்த ஒரு பிரச்னையாலும் பேச்சுக்குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக, சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு கரு உருவாகும் சமயத்தில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகளும், கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், சத்தான உணவு உட்கொள்ளாமல் இருப்பது,

அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்வது கர்ப்ப காலத்தில் நோய்வாய்ப்படுவது ஆகிய காரணங்களாலும் பேச்சுக்குறைபாடு குழந்தைக்கு ஏற்படலாம். பிரசவத்தின்போது குழந்தைக்கு கொடி சுற்றிப் பிறத்தல், பிறந்த உடன் குழந்தை அழாமல் இருத்தல், மேலும் பிரசவ சமயத்தில் ஏற்படும் எந்த விபத்தும் குழந்தையை பாதிக்கும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் காய்ச்சல், வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு ஆகிய அனைத்தும் பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடுகளுக்குக் காரணம் ஆகும்.

குழந்தை வளரும் பருவத்தில் காதில் ஏற்படும் வலி, சீழ் வடிதல் ஆகியவற்றையும் கூட கவனமாகக் கையாள வேண்டும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு ஏற்படும் மொழித்திறன் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஸ்பீச் தெரபி கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களது பேச்சுக் குறைபாட்டினை சரி செய்து இந்த சமூகத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்த்தெடுக்க முடியும்.

வனவர், வனக்காப்பாளர் பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மைய விவரம் இமெயில், எஸ்எம்எஸ்சில் அனுப்ப ஏற்பாடு...

Flash News -பள்ளிகளுக்கான மழை விடுமுறைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்



SCERT-2 days training for upper primary teachers



Flash News : 10th PUBLIC EXAM - NOMINAL ROLL DATE EXTEND UP TO 14/12/2018


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS)-2017-18 கல்வி ஆண்டு-நவம்பர் 2016-ல் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர்களின் விண்ணப்பங்களைப் Online & Offline ல் புதுப்பித்தல்(Renewal) - தொடர்ந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்காக தகுதியான மாணவர்களை இனம் கண்டறிதல் (Eligible Ineligible) - சார்பாக