செவ்வாய், 23 அக்டோபர், 2018

வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி 27ம் தேதி தொடங்கும்~ஜாக்டோ-ஜியோ…

மாணவர்கள் கண்டுபிடித்த புதிய டிராபிக் சிக்னல்

டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தில், புதிய முறையை இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் நேரம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் நடைபெறும் மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில், டிராபிக் சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் கை அசைவு மூலம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல்கள் வந்துவிட்டன. அதிலேயே டைமர் பொருத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யப்பட்டு, தானாகவே பச்சை மற்றும் சிவப்பு ஒளி விளக்குகள் மாற்றப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான், இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.

புதிய தொழில்நுட்பம்தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன்படி பச்சை / சிவப்பு விளக்குகள் எரியும். இதன்படி, ஒரு திசையில் வாகனங்களே வராமல் இருந்தாலும், அப்பகுதிக்கான பச்சை விளக்கு, நேரம் முடியும் வரை எரியும். இதனால் நேரம் வீணாகிறது.

மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பத்தில், கேமரா மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு வாகனங்கள் வருகிறது என்பதை கேமரா மூலம் படம் பிடித்து, சென்சார் மூலம் அப்படங்கள் உடனுக்குடன் மைக்ரோபிராசருக்கு செல்லும். அதற்கேற்றவாறு நேரமேலாண்மை தானாகவே கணக்கிடப்படுகிறது. இதனால் ஒரு திசையில் இருந்து அதிக வாகனங்கள் வந்தால், கூடுதல் நேரமும், மற்றொரு திசையில் வாகனங்கள் வருவது நின்றுவிட்டால், உடனடியாக சிவப்பு விளக்கு எரிந்து, அடுத்த திசைக்கான பச்சை விளக்கு எரிந்து விடும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் நேரம் மிச்சமாகிறது.

20தற்போது பயன்பாட்டில் உள்ள டிராபிக் தொழில்நுட்பம் அமைக்க ரூ. 8 லட்சம் செலவாகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே செலவாகும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

TRB - சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு!

சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 10 நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியானது.இதில், பல தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரச்னை எழுந்தது. அதிருப்தி அடைந்த தேர்வர்கள், ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் மனு அளித்திருந்தார்

. மனுவில், 'தையல், ஓவியம் ஆகிய பாடப் பிரிவுகளில், பல தேர்வர்கள் தவறான சான்றிதழ்களை காட்டி, பணி நியமன உத்தரவு பெற்றுள்ளனர்; எனவே, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்' என, கோரியிருந்தார்.இது குறித்து, டி.ஆர்.பி., துணை இயக்குனர் கையெழுத்திட்ட கடிதம், மனுதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும், மீண்டும் அவர்களின் சான்றிதழ் படிவம் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே, நியமனம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

அதேபோல, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதோரிடம், டி.ஆர்.பி., தரப்பில், கடிதங்கள் பெறும் பணியும் துவங்கியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் கணினி பேருந்து திட்டம்

கும்மிடிப்பூண்டியில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட, இரு தனியார் நிறுவனம் சார்பில், நடமாடும் கணினி பேருந்து திட்டம் துவங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அங்குள்ள சிப்காட் பகுதியில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எப்., நிறுவனம் மற்றும் எச்.பி., நிறுவனம் இணைந்து, நடமாடும் கணினி பேருந்து திட்டத்தை நேற்று துவக்கி வைத்தன. மொத்தம், 21 கணினிகள், 1 எல்.ஈ.டி., திரை கொண்ட அந்த பேருந்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான அனைத்து பாடங்களும், எளிய முறையில் அதன் விளக்கங்களும் அடங்கிய மென்பொருள் அந்த கணினிகளில் இடம் பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுழற்சி முறையில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, அந்த பேருந்து கொண்டு செல்லப்பட உள்ளது.பேருந்தில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுனர் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என, எஸ்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


Eastern Railway-2907 Apprentices Recruitment 2018 10th, ITI



Eastern Railway Recruitment 2018 2019 | Eastern Railway invites Online Application for the post of 2907 ACT Apprentices Posts. Eastern Railway ACT Apprentices Jobs Notification 2018 Released. Eastern Railway invites online applications for appointment in following ACT Apprentices post in Eastern Railway. Opening Date and time for Submission of Application is 15.10.2018 and end up by 14.11.2018. You can check here Eastern Railway Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Eastern Railway Selection Process, How to apply, Eastern Railway Syllabus, Eastern Railway Question Paper, Eastern Railway Admit Date Release Date, Eastern Railway Exam Date, Eastern Railway Result Release Date & other rules are given below.
Eastern Railway-2907 Apprentices Recruitment 2018 10th, ITI
Organization Name: Eastern Railway
Official Website: www.er.indianrailways.gov.in
Job Category: Central Govt Apprentices Training
No. of Posts: 2907 Vacancies
Name of the Posts: ACT Apprentices & Various Posts
Qualification: 10th ITI
Job Location: Kolkata (West Bengal)
Selection Procedure: Merit Listing, Interview
Last Date: 14.11.2018
Application Apply Mode: Online
Name of the Post & No of Vacancies:
Howrah – 659
Sealdah – 526
Malda – 204
Asansol – 412
Kanchrapara – 206
Liluah – 204
Jamalpur – 696
Eligibility Criteria for Eastern Railway ACT Apprentices:
Qualification-Candidates who have completed 10th, ITI or equivalent from a recognized Institute are Eligible to apply Eastern Railway Recruitment 2018
Age Limit:
Age Limit (As on 01.01.2019) – For Gen/ UR Candidates – Be between 15 to 24 years
Go through Eastern Railway official Notification 2018 for more reference
Eastern Railway ACT Apprentices Selection Procedure:
Merit Listing
Interview
Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.100/-
ST/SC/Ex-s/PWD – Nil
How to apply Eastern Railway ACT Apprentices Vacancy?
Step 1: Log on to Eastern Railway Careers Page at official website to www.er.indianrailways.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 15.10.2018
Last date for Submission of Application: 14.11.2018
Apply Mode: Online

RTI - மகப்பேறு விடுப்புக்கு முன் ஒரு அரசு பெண்ஊழியர் உயர்கல்வி பயில பெற முறையான அனுமதி பெற்று இருப்பின் அவர் அந்த உயர்கல்வியை மகப்பேறு விடுப்பிலும் தொடரலாம்!



திங்கள், 22 அக்டோபர், 2018

TNRTP Recruitment 2018-58 Young Professional Posts


TNRTP Recruitment 2018 2019 | TNRTP invites Online Application for the post of 58 Associate COO-Skills and Jobs, Associate COO-Finance Management, Deputy COO-Accounts, Deputy COO-M&E/MIS, District Executive Officer, Young Professional Posts. TNRTP YP, Dy COO Jobs Notification 2018 Released. TNRTP invites online applications for appointment in following YP, Dy COO post in Tamil Nadu Rural Transformation Project. Opening Date and time for Submission of Application is 15.10.2018 and end up by 31.10.2018. You can check here TNRTP Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TNRTP Selection Process, How to apply, TNRTP Syllabus, TNRTP Question Paper, TNRTP Admit Date Release Date, TNRTP Exam Date, TNRTP Result Release Date & other rules are given below.

TNRTP Recruitment 2018Notification Highlights – Apply Soon

Organization Name: Tamil Nadu Rural Transformation Project

No. of Posts: 58 Vacancies

Official Website: www.tnrtp.org

Name of the Posts: Associate COO-Skills and Jobs, Associate COO-Finance Management, Deputy COO-Accounts, Deputy COO-M&E/MIS, District Executive Officer, Young Professional & Various Posts

Qualification: Master Degree

Job Location: Tamil Nadu

Selection Procedure: Interview

Application Apply Mode: Online

Starting Date: 15.10.2018

Last Date: 31.10.2018



Name of the Post & No of Vacancies:

SI NoName of PostNo. of Post01Chief Operating Officer (COO) – Project Implementation0102Associate COO-Enterprise Business Financing0103Associate COO-Skills and Jobs0104Associate COO-Finance Management0105Deputy COO-Enterprise Ecosystem Development0106Deputy COO-Business Innovations0107Deputy COO-Skills and Jobs0108Deputy COO-EDP & Partnership0109Deputy COO-Accounts0110Deputy COO-M&E/MIS0111Deputy COO-Environment & Social Management Framework (ESMF)0112District Executive Officer1813Young Professional29Total58
Eligibility Criteria for TNRTP YP, Dy COO:

SI NoName of PostQualification01Chief Operating Officer (COO) – Project Implementation12+ years’ experience. ii) Master in Business Management/ Agribusiness Management from a reputed institute.02Associate COO-Enterprise Business Financing12+ years’ experience. ii) Master in Business Management/ Agribusiness Management from a reputed institute.03Associate COO-Skills and Jobs12+ years’ experience. ii) Master in Business Management/ Agribusiness Management from a reputed institute.04Associate COO-Finance Management12+ years’ experience. ii) Master in Business Management/ Agribusiness Management from a reputed institute.05Deputy COO-Enterprise Ecosystem Development8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders06Deputy COO-Business Innovations8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders07Deputy COO-Skills and Jobs8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders08Deputy COO-EDP & Partnership8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders09Deputy COO-Accounts8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders10Deputy COO-M&E/MIS8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders11Deputy COO-Environment & Social Management Framework (ESMF)8+ years of experience; Master in any discipline. Implementation, Coordination and Monitoring Experience of a Project that has implementation scope beyond 3 districts. Experience in handling the skill development initiatives in organizations like NSDC ILFS, L&T, or CSR skilling initiative. Aware of various skill development programs of the Government and other stakeholders12District Executive Officer6+ years of experience; Masters in Business Management/ Agribusiness Management from a reputed institute (Tier ordination and Monitoring Experience of district-level13Young ProfessionalMasters in Business Administration (preferably Tier 1)
Age Limit:

For Gen/ UR Candidates – (For Post 1 to 11 – 55 Years), (For post 12 – 45 Years), (For Post 13 – 30 Years)
Go through TNRTP official Notification 2018 for more reference

Salary Details:

Chief Operating Officer (COO) – Project implementation – Rs. 1,50,000- 2,00,000 Per month

Associate COO – Enterprise business financing – Rs. 1,00,000- 1,50,000 Per month

Associate COO – Skills and Jobs –Rs. 1,00,000- 1,50,000 Per month

TNRTP YP, Dy COO Selection Procedure:

Interview

How to apply TNRTP YP, Dy COO Vacancy?

Step 1: Log on to TNRTP Careers Page at official website to www.tnrtp.org
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” &
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 15.10.2018

Last date for Submission of Application: 31.10.2018

Last Date for Payment of Application Fees: 31.05.2018

Apply Mode: Online


முன்அனுமதியின்றி பயின்ற உயர்கல்விக்கு பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!



அழிவை நோக்கி செல்கிறதா மேல்நிலைபள்ளி தொழில்கல்வி பாடங்கள்?

🔥🔥🔥🔥அக்டோபர் 2018    அழிவை நோக்கி மேல்நிலை தொழிற்கல்வி?

💥💥💥சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வரும் மேல்நிலை தொழிற்கல்வி மெல்ல அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கல்வி ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் 10 பிளஸ் 2, பிளஸ் 3 என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் இத்திட்டம் 11, பிளஸ் 1, பிளஸ் 3 என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. புதிய கல்வி திட்டத்தின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் இரு வகையான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அவை பொதுக்கல்வி (GENERAL STREAM OF EDUCATION), தொழிற்கல்வி (VOCATIONAL STREAM OF EDUCATION). 1978-79-ஆம் கல்வி ஆண்டில் 709 மேல்நிலை பள்ளிகளில் 1,153 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் விவசாயம், வணிகம், வியாபாரம், மனையியல், பொறியியல் தொழிற்நுட்பம், சுகாதாரம் என 6 தலைப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.
தற்போது தமிழகத்தில் சுமார் 2,600 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தொழிற்கல்வியை மேம்படுத்த வேண்டுமென தமிழக அரசால் 1980-இல் அமைக்கப்பட்ட டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா, 1982-இல் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, 1985-இல் இயக்குநர் கே. கோபாலன், 1993-இல் டாக்டர் லாரன்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை பல்வேறு ஆண்டுகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் தொழிற்கல்வியின் அவசியம் குறித்து பரிந்துரைகள் அளித்துள்ளன.
1977-இல் அமைக்கப்பட்ட பி.சபாநாயகம் தலைமையிலான குழுவும், 1978- ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யுனெஸ்கோ துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷய்யா பரிந்துரைகள் "படித்துக்கொண்டே தொழில் பழகு' (Learning to do) என்ற கருத்தின்படி விவசாயம், வணிகம், சுகாதாரம், மனையியல் உள்ளிட்ட 8 வகையான தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
1986-இல் தேசிய கல்விக் கொள்கை தொழிற்கல்வியின்படி மேல்நிலை வகுப்புகளில் 1990-இல் 10 சதவீதம், 1995-இல் 25 சதவீதம் மாணவர்களும் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பை வழங்கிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அரசின் ஆணை எண்- 386, கல்வி நாள் 14.3.1955-இன்படியும் அரசாணை எண்-1657 கல்வி நாள் 6.9.1956-இன்படியும் பொதுக் கல்வி மற்றும் இருமுணை கல்வி (தொழிற்கல்வி) அறிமுகம் செய்யப்பட்டது. 1965-66-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பில் இரண்டு வகையான கல்வி பெற வகை செய்யப்பட்டு, பொதுக்கல்வி என்றும் அலுவலக செயலரியல், பொறியியல், விவசாயம், மனையியல், இசை, ஓவியம், பெயின்டிங் ஆகிய பாடங்கள் இருமுனைப் பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டன.
1978-79-ஆம் கல்வியாண்டில் 709 மேல்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டபோது மொத்தமிருந்த 1.14 லட்சம் மாணவர்களில் 24,400 பேர் தொழிற்கல்வி பெற்றனர். இது 21.49 சதவீதமாகும்.
தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,605 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
1978-79 -ஆம் ஆண்டில் 66 வகையான தொழிற்கல்வி பாடங்களாக அறிமுகம் செய்யப்பட்டன. 1985-86-ஆம் ஆண்டில் 44 பாடப்பிரிவுகளாக குறைக்கப்பட்டது. 2009-10-ஆம் ஆண்டில்12 பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.
அவை விவசாயம், வணிகமும் வியாபாரமும், பொறியியலும் தொழில்நுட்பமும், சுகாதாரம், மனையியல் ஆகிய 5 தலைப்புகளில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடை வடிமைத்தலும் தயாரித்தலும், வேளாண் செயல்முறைகள், உணவு மேலாண்மையும் குழந்தை வளர்ப்பும், நர்ஸிங், அலுவலக செயலரியல், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆட்டோ மெக்கானிக் என கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி 12 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.
தொழிற்கல்வி பாடங்களை கற்ப்பிக்க தமிழக அரசு 1978-79-ஆம் கல்வியாண்டில் 4,324 பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்தது. அந்த ஆசிரியர்களை பணி வரன்முறை செய்திடக் கோரி பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக ஆசிரியர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.
பின்னர் பணிமூப்பின் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் 435 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் அளிக்கப்பட்டது. ஆனால் 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் பணிமூப்பு மற்றும் இதர காரணங்களினால் சுமார் 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழந்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 95 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுவதால் படிப்படியாக தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழக்க சூழ்நிலை உருவாகும்.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது:
தற்போது இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் பெரும்பாலானோர் மெல்லக் கற்கும் (Slow Learners) மாணவர்கள். மேலும், 10-ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 250-க்கும் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள். மேலும் ஒரு முறை தேர்வில் வெற்றி பெறாத பின்னர் மறுதேர்வெழுதி வெற்றி பெற்ற மாணவர்களே சேர்க்கப்படுகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலியாக உள்ள சுமார் 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிறப்பிட வேண்டுகிறோம். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நிறைவு காரணமாகவோ வேறு காரணமாகவோ காலிப் பணியிடம் ஏற்பட்டால் அதை உடனே நிறப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட உள்ள 100 மேல்நிலைப் பள்ளிகளிலும் 2 தொழிற்கல்வி பணியிடங்களை ஏற்படுத்தி அப்பணியிடத்துக்கும் ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். 2017 மார்ச் மாதம் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் 12 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பில் 62,875 மாணவர்கள் தேர்வெழுதி 51,992மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது 82.7சதவீத வெற்றியாகும்.
இம்மாணவர்கள் குறிப்பாக மின் இயந்திரங்களும் சாதனங்களும் உள்ளிட்ட பொறியியல் பிரிவு மாணவர்கள் சுய தொழில் செய்யும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் சுயமாக தொழிலை செய்து முன்னேறியுள்ளனர்.
ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும் என்ற பாடப்பிரிவில் பெரும்பாலும் பெண்களே கல்வி பெறுகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை தைத்துக்கொள்வதிலும் தனது குடும்ப உறுப்பினர்கள், வீட்டருகில் உள்ளவர்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்தும் சுய தொழில் செய்து வருகின்றனர். நர்ஸிங் பிரிவு மாணவர்களும் உடனே வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களும் வாழ்வில் வளம் பெற தொழிற்கல்வித் திட்டத்தைத் தொடர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

"2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் பணிமூப்பு மற்றும் இதர காரணங்களினால்  சுமார் 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவர்கள் இழந்து வருகின்றனர்."