செவ்வாய், 23 அக்டோபர், 2018

அரசு பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் கணினி பேருந்து திட்டம்

கும்மிடிப்பூண்டியில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட, இரு தனியார் நிறுவனம் சார்பில், நடமாடும் கணினி பேருந்து திட்டம் துவங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அங்குள்ள சிப்காட் பகுதியில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எப்., நிறுவனம் மற்றும் எச்.பி., நிறுவனம் இணைந்து, நடமாடும் கணினி பேருந்து திட்டத்தை நேற்று துவக்கி வைத்தன. மொத்தம், 21 கணினிகள், 1 எல்.ஈ.டி., திரை கொண்ட அந்த பேருந்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான அனைத்து பாடங்களும், எளிய முறையில் அதன் விளக்கங்களும் அடங்கிய மென்பொருள் அந்த கணினிகளில் இடம் பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுழற்சி முறையில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, அந்த பேருந்து கொண்டு செல்லப்பட உள்ளது.பேருந்தில் நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுனர் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என, எஸ்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.