செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

Go (Ms)No :84 பட்டா மாறுதல் எளிமையாகிறது. பதிவு முடிந்ததும் தானாக பெயர்மாற்றம்



முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அரசாணை வெளியீடு Go No :22 date:11.02.2020




DSE Proceedings - பள்ளிக்கல்வி_ மத்திய அரசு உதவித்தொகை திட்டம் -தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்று இணையத்தில் பதிவு செய்யாத மாணவ மாணவியர் விண்ணப்பம் புதுப்பித்தல் சார்ந்து இயக்குநா் செயல்முறை நாள் 04.02.2020

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்_ இந்து தமிழ் தலையங்கம்


திங்கள், 10 பிப்ரவரி, 2020

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகள்













Namakkal CEO தேசிய பசுமை படை- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்- வினாடி வினா நடத்துதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை

தகத்தாயத்தலைவர் திரு.க.சேகருக்கு மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்து...

                                  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி்ஒன்றியச்
செயலாளர், நாமக்கல் மாவட்டத் தகவல் தொழில்நுட்பக்குழுவின் முதன்மைப்
பொறுப்பாளர்களில் ஒருவர்,
ஆற்றல்மிகு செயல்மறவர்,
எல்லோரின் பேரன்பிற்குரியவர் திரு.க.சேகர் அவர்கள்.

ஆசிரியர்மன்றத்தின் தகத்தாயத்  தலைவர். ஆசிரியர்சமுதாயத்தின் நலன்களில் சமரமற்ற போராளி திரு.க.சேகர் அவர்கள்.

திரு.க.சேகர் அவர்கள்
உயரும்-வளரும்வயதில் பெற்றுள்ள சங்கக்கல்வி அனுபவம்,படிப்பினை ,
பக்குவம் எல்லாமும் இணைந்து ஆசிரியர் மன்றத்தின் பணிகளில் ஒளிரும்!மிளிரும்!என்று நம்புகிறேன்.

அன்புச் சகோதரர் திரு.க.சேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த
 இனிய நல்வாழ்த்து!
-முருகசெல்வராசன்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

2016-ம் ஆண்டை விட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2018-ல் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்...

2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களைக் காட்டிலும், 
2018-ம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 2016-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றங்கள் நடந்தன. இது 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 32 குற்றங்களாக உயர்ந்தன. 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 குற்றச்சம்பவங்களாக அதிகரித்துள்ளன.

இருப்பினும் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்புச் சட்டம் (போக்ஸோ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டு கடுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 2018-ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் குறித்துத் தெளிவான விவரங்கள் வழங்கப்படவில்லை".

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்த்தார்.