வியாழன், 15 நவம்பர், 2018

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்...

தேனீ வளர்ப்பு ~ இலவச பயிற்சி...

ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை~புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து…

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு...

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்.கே.ஜி. வகுப்புகளில் பாடம்...

தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது பெற 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு...

புதன், 14 நவம்பர், 2018

தொப்பையை குறைக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்...!






சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது.


மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.


செய்முறை: குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும்.




ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம். பலன்கள்: வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.

மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும்.

முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.



திருக்குறளில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்


ஆசிரியர்களின் விடா முயற்சி மற்றும் பணி அர்ப்பணிப்பால், அரசு பள்ளி மாணவர்கள் திருக்குறளில் பல்வேறு சாதனை புரிந்து வருவது பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

 மீஞ்சூர் ஒன்றியம், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ப்ரி கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை, 74 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள். மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக இருந்து வருகின்றனர்.திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் அதிகாரங்களின் வரிசையிலும், எண்களின் வரிசையிலும் உச்சரிப்பு பிழையின்றி சொல்லி அசத்துகின்றனர். திருக்குறள் துவங்கும், முடியும் வார்த்தை என. எப்படி கேட்டாலும், அந்த குறளினை முழுமையாக கூறுகின்றனர்.மூன்று ஆண்டுகளாக, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமா, உதவி ஆசிரியர் கனிமொழி, பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் சங்கீதா ஆகியோரின் பணி அர்ப்பணிப்பால், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். 
கடந்த மாதம், உலக திருக்குறள் மையம் சார்பில் நடந்த போட்டியில், இப்பள்ளியைச் சேர்ந்த, 21 மாணவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர்.'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்து உள்ளனர். மேலும், திருக்குறள் ஞாயிறு, திருக்குறள் பிஞ்சு என, பல்வேறு பட்டங்களையும் பெற்று உள்ளனர். 'லிம்கா ரெக்கார்ட்சில்' இடம் பெற தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர்.



2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்