ஞாயிறு, 12 நவம்பர், 2017
சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள்பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும்.அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம்.6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும், 9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி வரைவிநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் 'முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்-642102' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு (www.sainikschoolamaravathinagar.edu.in)என்ற இணையதளத்தை
பார்த்து தெரிந்துகொள்ளலாம்...
NAS 2017 -(13/11/2017)-INSTRUCTIONS...
📕 *NATIONAL ACHIEVEMENT SURVEY -NAS (2017)*
*📗 Date: 13/11/2017*
*📗 Shambling schools HM BRC யில் வினாத்தாள் வாங்கி செல்ல வேண்டும்*
📗 *Survey யின் போது ஆசிரியர் & மாணவர் 100% வருகை தரவேண்டும்*
*📗Field* *Investigaters*
*பணிகள்*
1) தேர்வை நடத்துவது
2) 3 க்கும் 5 க்கும் OMR sheets நிரப்புவது
3) ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் Interview எடுத்து பதிதல்
📗 *தயார் நிலையில் இருக்க வேண்டியவை:*
1) பள்ளியின் U-DISE NO
2)மாணவர்களின் DOB /ஆதார் என் / சேர்ந்த ஆண்டு / Community / special need
*❌NAS questioner ஐ போட்டோ /Xerox /எடுப்பதும் what's app ல் அனுப்புவதும் தடை செய்யப்பட்டு உள்ளது*
*உதவுவோரும் உரியோரும் தண்டிக்கப் படுவர்*
📗 *Monitoring officers:*
DEE / DSE / SCERT / NCERT / MHRD அலுவலர்கள்
📗 *Supervising Flying squad:*
BDO / REVENUE துறை அலுவலர்கள்
📗 *FIELD INVESTIGATER :*
B.Ed பயிற்சி மாணவர்கள்
📗 *Portion:*
ஆங்கிலம் தவிர்த்த பிற பாடங்கள்
சனி, 11 நவம்பர், 2017
வெள்ளி, 10 நவம்பர், 2017
NMMS ENTRY Date is Extended
NMMS இணயதள serverல் உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 12.11.17 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது
*விடுமுறை நாட்கள்:*👇
*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*
*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*
*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*
*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*
*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*
*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*
*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*
*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*
*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*
*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*
*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*
*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*
*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*
*14. பக்ரீத் -22.08.2018- புதன்*
*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*
*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*
*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*
*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*
*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*
*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*
*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*
*22. மிலாது நபி -21.11.2018- புதன்கிழமை*
*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*