செவ்வாய், 14 நவம்பர், 2017
சொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு
சொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல்லது கட்டும் சொந்த வீட்டுக்கான முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதிலும் மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கோ அல்லது விலைக்கு வாங்குவதற்கோ 'HBA (House Building Advance)' எனப்படும் முன்தொகை, கடனாக அளிக்கப்பட்டு வருகிறது. இது ரூ.7.50 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த முன்தொகை பெறுவதற்கு ரூ.30 லட்சமாக இருந்த சொந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்தொகை கடனுக்கு 9.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இத்துடன் இந்த வட்டிவிகிதம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கடன் அளிக்கப்பட்டு வந்தது. இதை சற்று தளர்த்தி இருவரில் ஒருவர் பெயரில் அல்லது இருவரது பெயரிலும் கடன் வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சொந்த வீட்டுக்காக ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பணியாளர்கள், முன்தொகையான ரூ.25 லட்சம் அன்றி வங்கியிலும் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் தங்கள் வீடுகளின் பத்திரங்களை அடமானமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் 'தி இந்து' விடம் கூறும்போது, ''மத்திய அரசுப் பணியாளர்கள் சொந்தமாக வீடு வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் அரசிடம் பெறும் கடனுக்கான தவணைத் தொகை, தனியார் வங்கிகளை விடக் குறைவு என்பதே அதற்கானக் காரணம்.சொந்த வீடு வாங்குவதற்கான முன்தொகை பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தது. எனவே தற்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்றபடி உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் அதை விரிவுபடுத்த அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 34 மடங்கு அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடனாக அளிக்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதில் வீடுகட்ட அதன் விலையில் 80 சதவீதம் வரை முன்தொகை அளிக்கப்படுகிறது. இதில் கட்டப்படும் வீடு கிராமப்புறத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ., அவகாசம்
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
EMIS STUDENT ADMIT OPTION FROM OTHER SCHOOLS ENABLED NOW
EMIS வலைதளம் மாணவர் சேர்க்கை (அட்மிட்) குறைபாடு நிவர்த்தி
இதர பள்ளிகளிலிருந்து நம் பள்ளிக்கு மாணவர் விபரங்களை அட்மிட் செய்யும் போது அனைத்து உள்ளீடுகளும் முடிந்த பின்னும் அந்த விபரங்கள் நம் பள்ளிக்கு அப்டேட் ஆகாமல் இருக்கும அக்குறை சரி செய்யப்பட்டுள்ளது .மேலும் அட்மிட் அனைத்து ப்ரௌசர்களிலும் இயங்கும் வண்ணம் இப்போது EMIS வலைதளம் சரி செய்யப்பட்டுள்ளது போட்டோக்கள் அப்லோடு செய்யமுடியும். அடையாள அட்டை பதிவுகள் பதியலாம் எந்த நிலையிலும் தவறுகள் சரிசெய்யும்(edit) வசதி செய்யப்பட்டுள்ளது
கற்றல் விளைவுகள் பயிற்சி அட்டவணை :
உயர் தொடக்கநிலைஆசிரியர்கள் :
தமிழ் & ஆங்கிலம் :
நவம்பர்15 & 16
அறிவியல் & கணக்கு :நவம்பர் 20 & 21
சமூக அறிவியல் : நவம்பர் 22 & 23
*தொடக்கநிலை
ஆசிரியர்கள்:*
50% : நவம்பர் 22 முதல் 25வரை
50% : நவம்பர் 27 முதல் 30வரை
திங்கள், 13 நவம்பர், 2017
Online பத்திரப்பதிவு நவம்பர்-15 முதல்...
தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே பத்திரங்களை பெறலாம்.
தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை, ஆன் லைன் முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை, 154 சார் பதிவாளர் அலுவலங்களில், செயல்பாட்டில் உள்ளது. இதை, மற்ற அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான கணினி உள்ளிட்ட நவீன கருவிகள், தகவல் பதிவு பணியாளர் ஆகிய வசதிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் வழங்கி உள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஆன் லைன் முறையில் உண்மை தன்மை சரி பார்க்கப்பட்டு, தவறுகள் இருந்தால், அவற்றை திருத்தும் வகையில், இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.
அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், நவ., 15 முதல், புதிய நடைமுறை துவக்கப்பட உள்ளது. இதற்காக, முதல்வர், துணை முதல்வரின் நேரத்தை பெற்று, முறைப்படி அறிவிகக, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையால், பதிவு முடிந்த சில நிமிடங்களில், பத்திரத்தை மக்கள் பெற முடியும்.
ஞாயிறு, 12 நவம்பர், 2017
*RH(2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்*
*RH(2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்*
*💥ஜனவரி:*
1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.
*💥 பிப்ரவரி:*
1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.
2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.
*💥 மார்ச்:*
1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.
*💥ஏப்ரல்:*
1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.
2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.
*💥மே:*
1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத்.
2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.
*💥ஜூன்:*
1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.
*💥ஜூலை:*
1. RL இல்லை.
*💥ஆகஸ்ட்:*
1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.
*💥 செப்டம்பர்:*
1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.
*💥அக்டோபர்:*
1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.
*💥நவம்பர்:*
1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.
*💥டிசம்பர்:*
1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.