வியாழன், 23 நவம்பர், 2017

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.

இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்...

TN Govt G.O. Ms No 340 Dated 20-11-2017 for the Revision of Pension/Family Pension and Retirement benefits order issued.

SCHOOL TEAM VISIT - பள்ளி ஆய்வின் போது , ஆய்வு அலுவலர்களால் பள்ளிகளில் கவனிக்க வேண்டியவை விவரம் - தர்மபுரி மாவட்டம்.

புதன், 22 நவம்பர், 2017

DSE PROCEEDINGS-MGR நூற்றாண்டு விழாவினை கொண்டாடுதல்- மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் சார்பு!

School Visit Format (English)

https://drive.google.com/file/d/164SVYrfczJG6fibkKY0P3xm9-8Ikx2KF/view?usp=drivesdk

டிசம்பர் 2ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு...


ஏற்கெனவே டிச. 1ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று அரசு உத்தரவு..

செவ்வாய், 21 நவம்பர், 2017

பள்ளி பார்வை அறிக்கை-கிருஷ்ணகிரி மாவட்டம்

School Visit Format (Tamil)

https://drive.google.com/file/d/1UmyD53P93RJj8VTOMLroGaLAtOfucV6l/view?usp=drivesdk

தூய்மைப்பள்ளி விருதுகள் ஆய்வுக்கு உத்தரவு...

மத்திய அரசின், தூய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்  உத்தரவிட்டுள்ளார். 

மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு கடந்தாண்டு முதல் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும் 172 பள்ளிகளுக்கு தேசிய தூய்மைப்பள்ளி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 
இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில் பள்ளிகள் சார்பில் புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த 40 பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்க வேண்டுமென அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர்  உத்தரவிட்டுள்ளார்.