சனி, 25 நவம்பர், 2017
TNPSC Exam 2018 - Tips & Study Materials...
⭐TNPSC Exam - How to Apply Online?👇
https://goo.gl/7SiBVb
⭐TNPSE Exam-Study Materials...👇
https://goo.gl/7zhVPA
⭐TNPSC Exam - Previous Year Question Papers - Free Online Test...👇
https://goo.gl/gM1Wy6
வெள்ளி, 24 நவம்பர், 2017
பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த சேலத்தில் இணையவழி பண்பலை தொடக்கம்...
தமிழகத்தில் முதல்முறையாக, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர், மாணவர்களின் திறனை ஊக்குவிக்க சேலத்தில் இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், இணையவழி பண்பலை கல்வி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பண்பலை சேவையை, மாநில கல்வியியல் ஆரா ய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் பொன்.குமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். தொழில்நுட்ப பிரிவு துறைத்தலைவர் விஜயலட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார். இணையதளத்தில் மாங்கனி பண்பலை அல்லது டயட்(DIET) சேலம் என்ற தளத்தில் மூலம் நிகழ்ச்சிகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பண்பலை சேவையை தொடங்கி வைத்து இணை இயக்குநர் பொன்.குமார் கூறியது:தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இணையவழி பண்பலை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி செய்திகள், கற்றல் கற்பித்தலின் தற்போதய முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திற்கு இணையான செய்திகள், பாடல்கள், கதைகள் மற்றும் சொற்பொழிவுகளை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து பாடும் திறன், கதை கூறும் திறன், புதிர்கள், நாடகங்கள், பாடக்கருத்துகளை வழங்கும் விதம் ஆகியவை மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தைவளர்த்துக்கொள்ள முடியும். மேலும், கற்றலில் ஏற்படும் சந்தேகங்கள், தெளிவுரைகளையும் போக்கும் வகைகள் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக, இந்த ஒலிபரப்பு சேவையை தினமும் அரை மணி நேரம் பள்ளி இடை வேளை நேரத்தில் கல்வி தொடர்பான தகவல்கள் இந்த பண்பலை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேம்படுத்தி முழுநேரமாகவும், உடனுக்குடன் தகவல்களை தொடர்பு கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.
வியாழன், 23 நவம்பர், 2017
+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை-அரசு தேர்வுகள் இயக்ககம்
2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.
தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களின், மொத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு மாற்றி கணக்கிடப்படும்.
அகமதிப்பீடு தனித் தேர்வர்களுக்கு மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்
மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில்,அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும்
மாணவர்களில்,மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.
இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்