புதன், 29 நவம்பர், 2017

TNPSC - குரூப் - 2 தேர்வு- 'ரிசல்ட்' வெளியீடு!

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில்,
குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில்,49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வருமான வரி(IT) கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)


💰 நிதி ஆண்டு 2017-2018,

💰மதிப்பீடு ஆண்டு 2018-2019.

💰வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)

💰 ரூ.250000 வரை – வரி இல்லை,

💰 ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் – நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,

💰 ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் – நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,

💰 ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் – நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.

💰படிவம் 12BB – ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.

💰நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.

💰 பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.

 மேலும் வருமான வரி கணக்கீடு சம்பந்தமான தகவல்களுடன் வருமான வரி கணக்கீடு படிவங்கள் jpg மற்றும் PDF வடிவிலான கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1nSLxJo2UY3_O9ymFfm5YI3YtslROL1gw/view?usp=drivesdk

TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்...

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?

வாங்கலாம் , பயன்படுத்தலாம் ஆனால் 10 ஆம் வகுப்பிற்கு மட்டுமே வாங்கி விண்ணப்பிக்க வேண்டும் , பட்டப்படிப்பில் நீங்கள் வாங்கி இருந்து விண்ணப்பித்தால் இத்தேர்வுக்கு அது செல்லாது.

#ஏன் 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும்?

எந்த ஒரு தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி என்னவோ அதை தமிழ் வழியில் படித்திருந்தால் நீங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு பெறமுடியும். குருப் 4 தேர்வைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தான் கல்வித்தகுதி எனவே 10 ஆம் வகுப்புக்கு வாங்க வேண்டும். எ.கா நீங்கள் 9 வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்திருந்தாலும் 10 ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்தான்.

#அப்படியென்றால் , கல்லூரியில் வாங்கவா அல்லது பள்ளியில் வாங்கவா?

10 ஆம் வகுப்பு எங்கு படித்தீர்களோ அந்த பள்ளியில் வாங்கவேண்டும். ஏற்கனவெ வாங்கியிருந்தால் தேவையில்லை . தனியராக தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆதாரமாக வைத்து பள்ளிக்கல்வித்துறையில் வாங்க வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ கபிலர்மலை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் _ 28/11/17_ வெங்கமேடு (வேலூர்) -நிகழ்வுகள்...

DEEO - பணிப்பதிவேடு காணாமல் போனால் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் (AEEO'S) மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் சார்பு...

செவ்வாய், 28 நவம்பர், 2017

Sastra University- B.Ed (Distance Mode) 2018- Advertisement​

Directorate of Government Examinations - ESLC - January 2018 - Examination Time Table...

வரைவு பாடத்திட்டம்- கால அவகாசம் நீட்டிப்பு...


வரைவு பாடத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 20ம் தேதி வெளியிட்டார். புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாடம் மாற்றியமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் அரசு தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (நவ.27 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 7 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.