வியாழன், 7 டிசம்பர், 2017
NMMS தேர்விற்கான HALL TICKET -ஐ 08.12.2017 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ...
NMMS தேர்விற்கான HALL TICKET -ஐ 08.12.2017 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 16ல் நடக்க உள்ளது.இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம்.
டிசம்பர்-7:கொடி நாள்...
இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.
இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஊதியப்பதிவேட்டில் ஊதிய விபரம் குறிப்பிடுதல் சார்ந்த கருத்துப் பார்வை...
முந்தைய ஊதிய குழுக்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் Scales of Pay என இருந்தது, தற்போதைய ஊதிய குழுவில் Levels of Pay என உள்ளது.
எனவே தற்போது முந்தைய Pay Band க்கு இணையாக அந்தந்த பதவிகளுக்குரிய Level of Pay ஐ குறிப்பிட்டு எழுதலாம்.
PB - 1ல் GP 2800 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு Level 10 (20600 - 65500) என Level of Pay என்பதை ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு ஊதிய தொகையையும் குறிப்பிடலாம்.
உதாரணமாக
Level 10 (20600 - 65500) Cell 34 Pay 54900 என எழுதலாம்.
PB - 2 ல் GP 4300 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு LEVEL 12 ( 35600 - 112800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் GP 4500 லிருந்த தொ.ப. த.ஆசிரியர்களுக்கு LEVEL 15 ( 36200 - 114800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் PB 4600 லிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு Level 16 ( 36400 - 115700 ) என ( ) ல் Level of Pay குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
PB - 2 ல் GP 4700 லிருந்த ந.நி.ப. த.ஆசிரியர்களுக்கு Level 17 ( 36700 - 116200 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.
புதன், 6 டிசம்பர், 2017
ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் Pay Band & Grade Pay க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது -ஏற்கனவே இருந்த Grade Pay-க்கு நேராக உள்ள Level எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்....
உதாரணம்:
ஏற்கனவே தொ.ப.த.ஆ Grade Pay 4500 எனில் அவருக்கு தற்போது Level -15 ல் உள்ள
36200-114800 என எழுத வேண்டும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)