வெள்ளி, 8 டிசம்பர், 2017
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: YouTube நிறுவனம்!
யூடியூப்பில் ஏற்படும் வன்முறையை பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், சிலர் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல் பிரச்சினைகளை களைவதற்கு 10,000 நபர்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் வன்முறை பிரசாரம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 7 டிசம்பர், 2017
தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்,தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புத்தொகை விண்ணப்புதவித் தொகை விண்ணப்ப படிவம்...
Technical Edu - Scholarship.pdf
நாமக்கல் மாவட்டம்_ அரசு நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்கள் பணியிட நிரவல்_ உபரி ஆசிரியர்கள் என 2017 மே மாத உபரி பணியிட கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்கப்பட்ட ஒன்றிய/நகராட்சி ஆசிரியர்களை மீள அவரவர் ஒன்றியத்தில் பணியமர்த்திட கோருதல் சார்பாக...
நாமக்கல் மாவட்டம்_ அரசு நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்கள் பணியிட நிரவல்_ உபரி ஆசிரியர்கள் என 2017 மே மாத உபரி பணியிட கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்கப்பட்ட ஒன்றிய/நகராட்சி ஆசிரியர்களை மீள அவரவர் ஒன்றியத்தில் பணியமர்த்திட கோருதல் சார்பாக , நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு. முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...
ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களை சார்ந்த ஆசிரியர் _ அரசு ஊழியர்களுக்கு கிடைத்திட ஆவன செய்திட வேண்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...
பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!
பாஸ்வேர்டு... மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான்.
ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம். 1.எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!
மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345 போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.
2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:
ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.
3.பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:
ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:
உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.
5. நீளம் மற்றும் தன்மை:
உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.
6. எண் விளையாட்டு:
எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம். குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.
7. கடினமான லாஜிக்:
முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)