வெள்ளி, 8 டிசம்பர், 2017

'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி...


மத்திய, மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்கு பயிற்சி தரப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கி, முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை துவங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும், போட்டி தேர்வு பயிற்சிக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும், 3,000, 'ஸ்மார்ட்' வகுப்புகளும், திறனறி தேர்வு பயிற்சி மையங்களாக செயல்பட உள்ளன.
இதற்காக, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது முயற்சி : திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி, இணையதளத்தில், 'யூ டியூப் லிங்க்' வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தொடக்க கல்வித்துறை சார்பில், புதிய இணையதளம் துவங்கப்பட உள்ளது. அதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தொகுப்புகள், விடைக்குறிப்புகள் இடம்பெறும். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், திறனறி தேர்வுக்கான கையேடுகள் வழங்கப்படும். திறன் தேர்வில் அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை, தொடக்க கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பணி நாட்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்தல் ஆணை!

புது பாடத்திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் ,கூகுள் சுந்தர் பிச்சை...

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: YouTube நிறுவனம்!

யூடியூப்பில் ஏற்படும் வன்முறையை பிரச்சினைகளைக்  கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.



கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், சிலர் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல் பிரச்சினைகளை களைவதற்கு 10,000 நபர்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் வன்முறை பிரசாரம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிசம்பர், 2017

INCOME TAX FORM 2017-18...

NMMS -EXAM CENTRE FOR ALL DISTRICTS...

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம்,தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புத்தொகை விண்ணப்புதவித் தொகை விண்ணப்ப படிவம்...

நாமக்கல் மாவட்டம்_ அரசு நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்கள் பணியிட நிரவல்_ உபரி ஆசிரியர்கள் என 2017 மே மாத உபரி பணியிட கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்கப்பட்ட ஒன்றிய/நகராட்சி ஆசிரியர்களை மீள அவரவர் ஒன்றியத்தில் பணியமர்த்திட கோருதல் சார்பாக...

நாமக்கல் மாவட்டம்_ அரசு நிதி உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்கள் பணியிட நிரவல்_ உபரி ஆசிரியர்கள் என 2017 மே மாத உபரி பணியிட கலந்தாய்வில் இடமாறுதல் அளிக்கப்பட்ட ஒன்றிய/நகராட்சி ஆசிரியர்களை  மீள அவரவர் ஒன்றியத்தில் பணியமர்த்திட கோருதல் சார்பாக , நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு. முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...

ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களை சார்ந்த ஆசிரியர் _ அரசு ஊழியர்களுக்கு கிடைத்திட ஆவன செய்திட வேண்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...

பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!


பாஸ்வேர்டு... மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான்.
ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம். 

1.எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!
மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345 போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.

2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:
ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.

3.பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:
ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:
உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.

5. நீளம் மற்றும் தன்மை:
உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.

6. எண் விளையாட்டு:
எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம். குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.

7. கடினமான லாஜிக்:
முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.