செவ்வாய், 19 டிசம்பர், 2017
அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை...
☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.
☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.
☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.
☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.
_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_
திங்கள், 18 டிசம்பர், 2017
சைகை மொழிக்கு ஆப்!
பேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்கள்மற்ற மக்களிடையே தகவல் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.
குறைபாடுள்ளவர்களின்நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் மட்டுமே அந்தச்சைகை மொழியைப் புரிந்துகொள்ள முடியும்.
வேலை காரணமாக இவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது மிகக் குறைவானவர்கள் மட்டுமே சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள். இது தொழிலில் முன்னேற்றம் அடைவதற்குத் தடையாக இருக்கிறது. சைகை மொழியைக் கற்றுக்கொள்வது என்பது எளிதல்ல.
இவர்களுக்கு உதவக்கூடிய அப்ளிகேஷன் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சைகை மொழியை எழுத்துப் பிரதியாக மாற்றுவதற்கான அப்ளிகேஷன்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை ஐஐடி வாரணாசியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.ஐஐடி வாரணாசியில் உயிரியல் பொறியியல் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் நிகில் டாக்கா என்ற மாணவன் இந்த ஆப் உருவாக்குவதற்கான யோசனையைவழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், இதை ஒரு செயல்திட்டமாகவும் செய்துள்ளார். ஆரம்பத்தில் கை சைகைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஒருஆப் உருவாக்கப்பட்டது.
டாக்கா செயல் திட்டத்தை மதிப்பீடு செய்த உயிரியல் மருத்துவ பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர், நீராஜ் ஷர்மா, சைகை மொழியை எழுத்துபிரதியாக மாற்றக் கூடிய ஒரு ஆப்பை உருவாக்க முடியும் என்று பரிந்துரைத்தார். இதனால், மக்கள் மற்றும் குறைபாடுள்ள மக்களிடையே தகவல் தொடர்புஎளிமையாகும்.இந்தப் பயன்பாடு நடைமுறைக்கு வந்தால், அத்தகைய குறைபாடுள்ளவர்கள் சமூகத்தில் நல்ல முறையில் செயல்பட முடியும். தற்போது, இந்த ஆப் வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளது.
இந்த ஆண்டு முடிவதற்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் எங்களுடைய நோக்கம். ஆனால், எழுத்துப் பிரதியாக மாற்றுவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவில் துல்லியமாக அதை முடித்துவிடுவோம். சைகை மொழியைப் பேச்சு மொழியாக மாற்றவும் முயற்சி செய்துவருகிறோம். எங்களுடைய அடுத்தகட்ட வேலை அதுதான் என மாணவர் நிகில் டாக்கா கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)