வெள்ளி, 29 டிசம்பர், 2017

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்/தீயணைப்பு/ சிறைக்காவலர்கள் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு...

DSE PROCEEDINGS-நிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்துபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட உத்தரவு...


தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக க அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பள்ளிகளுடனான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

நன்கொடை பெற்று நடத்தலாம்: அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்படும் தேதியை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் இடம் பெற வேண்டும். கூடுதலாக அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கல்வியாளர்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் தொகை தேவைப்படும் நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஆண்டு விழாவை நடத்த வேண்டும்.

80-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்...

மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 80-க்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், 120-க்கும் குறைவாக உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுவிழா கொண்டாட நிதி ஒதுக்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் அருகில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஆண்டு விழாவை நடத்தலாம். இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தச் செய்வதாக இருக்க வேண்டும். பள்ளியின் இறுதித் தேர்வு முடிவதற்குள் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்ய வேண்டாம்~அரசு தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள்...

SSA – ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்...

📱EMIS~SMART CARD APP~ VIDEO…

School Calendar~January-2018....