சனி, 30 டிசம்பர், 2017

வருமான வரி வரம்பு குறைப்பு!


வருமான வரி வரம்பு குறைப்பு...

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் 
வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.

2. வரிக்கழிவு குறைப்பு

பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.

3. ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் வரிச் சலுகை ரத்து

கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme – RGESS) அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி-க்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வரிச் சலுகை பெற பல குழப்பமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன (விளக்கமாகப் படிக்க: http://bit.ly/2uuqRfG). இதன் காரணமாக இதில் அதிகமான வர்கள் முதலீடு செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டு முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4. வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறைப்பு

நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கான வரிச் சலுகை குறைக்கப் பட்டுள்ளது. இது பற்றி முன்னணி ஆடிட்டரான எஸ்.சதீஷ்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

"வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் நிதியாண்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு இல்லாமல் முழு வட்டிக்கும் வரிச் சலுகை தரப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டுவது அவசியம். ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கி, ஒரு வீட்டில் குடியிருந்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அனைத்துக் கடன்களையும் திரும்பக் கட்டும் வட்டியில், மேலே கூறப்பட்டது போல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது.

நடப்பு 2017-18 ம் நிதியாண்டில், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பெற முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தவர்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரிச் சலுகைக்காக வீடு வாங்குவது குறைந்து ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.

எனினும், வீட்டுக் கடன் வட்டி மூலமான இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் முந்தைய சலுகை இப்போதும் தொடர்கிறது" என்ற சதீஷ்குமார், இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியும் சொன்னார்.

"வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,20,000 கிடைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வாடகைத் தொகையில் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய வரி மற்றும் பராமரிப்புச் செலவைக் கழித்துக்கொண்டு, மீதியை வாடகை வரவாக எடுத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு கட்டிய சொத்து வரி ரூ.15 ஆயிரம் என வைத்துக் கொண்டு, அதைக் கழித்துக் கொள்வோம். மீதமுள்ள 1.05 லட்சத்தில் 33 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவான ரூ.34,650-யைக் கழித்தால் ரூ70,350-ஆகக் கிடைக்கும். இதனை வாடகையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிதியாண்டில் வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டி ரூ.2.25 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதிலிருந்து வீட்டு வாடகை ரூ.70,305-யைக் கழித்தால், அவருக்கு வட்டி மூலமான இழப்பு ரூ.1,54,650 ஆகும். இந்தத் தொகையை அடுத்த எட்டு ஆண்டுகளில் கிடைக்கும் .

வெள்ளி, 29 டிசம்பர், 2017

Bharathiar University ~ B.Ed. Programme 2018-2020~ Admission Notification…


Application forms are issued from 13.12.2017...

Last Date for submission of Application 30.04.2018...

Spot admission from 13.12.2017 onwards...

For more, click here...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்/தீயணைப்பு/ சிறைக்காவலர்கள் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு...

DSE PROCEEDINGS-நிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்துபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட உத்தரவு...


தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக க அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பள்ளிகளுடனான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

நன்கொடை பெற்று நடத்தலாம்: அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்படும் தேதியை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் இடம் பெற வேண்டும். கூடுதலாக அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கல்வியாளர்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் தொகை தேவைப்படும் நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஆண்டு விழாவை நடத்த வேண்டும்.

80-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்...

மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 80-க்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், 120-க்கும் குறைவாக உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுவிழா கொண்டாட நிதி ஒதுக்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் அருகில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஆண்டு விழாவை நடத்தலாம். இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தச் செய்வதாக இருக்க வேண்டும். பள்ளியின் இறுதித் தேர்வு முடிவதற்குள் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களை "லேமினேசன்" செய்ய வேண்டாம்~அரசு தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள்...

SSA – ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்...

📱EMIS~SMART CARD APP~ VIDEO…

School Calendar~January-2018....