Click here...
திங்கள், 1 ஜனவரி, 2018
பெண் கல்வி உதவித்தொகை ஜன-31 வரை அவகாசம்...
பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி : மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு, 2005 — 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து…
முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
இத்திட்டத்தில், மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும், ஜன-31ம் தேதிக்குள், 'ஆன் – லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இம்மாதம் இறுதி : பல்கலை அளவில் தரம் பெற்ற மாணவர்கள் மற்றும், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும், இம்மாதம் இறுதிவரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தொலைந்த Mobile Phone ஐ ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்... அனைத்தையும் Lock,Erase கூட செய்யலாம்…!
செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்…..
அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
find my device
*find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.
முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..
பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை login செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு login ஆகும்.
அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.
ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.
*play sound
கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
*lock
ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் lock ஆகி விடும்.
*erase
ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.
இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்
ஞாயிறு, 31 டிசம்பர், 2017
ஆங்கிலப் புத்தாண்டின் உண்மையான வரலாறு...
இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் உலகம் முழுவதுமுள்ள மக்களால் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் முதல் தினம் ஆங்கிலப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டு எப்படி வந்தது என்று கேட்டால் நம்மில் பலரிடம் பதில் இல்லை. வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம், அந்த தினம் எப்படி தோன்றியது என்பதன் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
*மெசபடோனியர்களின் புத்தாண்டு*
ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.
*ரோமானியர்களின் புத்தாண்டு*
சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.
*ஜீலியன் காலண்டர்*
ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது.
*புத்தாண்டு தினத்தில் நிலவிய குழப்பம்*
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது.
*கிரிகோரியன் காலண்டர்*
கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.
*புதிதாய் பிறந்த புத்தாண்டு கிரிகோரியன்*
காலண்டர் முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
*அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...*
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று(31.12.17)...
வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று 31.12.17 சென்னையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூடடணி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. திரு.இரா. தாஸ்,திரு. மு.அன்பரசு தலைமை ஏற்றனர்.
அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
1) 6.1.18 அன்று CPS ரத்து அறிக்கை வெளியிடுதல்; பொங்கல் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர்முழக்க போராட்டம் நடத்துவது.
2.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
3) 9.1.18 & 10.1.18 நாட்களில் அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது.
4)4.2.18 அன்று சென்னையில் CPS ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது. அதில் நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்ற உறுப்பினர்,தொழிற்சங்க தலைவர்,ஆகியோரை பங்கேற்க அழைப்பது.
5) ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர்மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது.
6) வழக்கு மற்றும் போராட்ட நிதி சங்கத்திற்கு ரூ. 20000/_ என முடிவு செய்யப்பட்டது.
இவண். ஜாக்டோ-ஜியோ ,ஒருங்கிணைப்பாளர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)