திங்கள், 8 ஜனவரி, 2018

ஆசிரியர் கவுன்சிலிங் குழப்பம் தவிர்க்க ஆன்லைனில் காலி பணியிட விபரம்...


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் குழப்பத்தை தவிர்க்க, காலியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் களுக்கு, மாநில அளவிலான கலந்தாய்வும், தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களுக்கு, மாவட்ட அளவிலான கலந்தாய்வும் நடக்கிறது.


கடந்த ஆண்டு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, ஆன்லைன் கலந்தாய்வில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. பல இடங்கள் மறைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.இதை போக்கும் வகையில், தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்...பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் விபரங்கள் மற்றும் காலி பணியிட விபரங்களை, www.tndse.com என்ற இணையதளத்தில், அனைத்து தலைமை ஆசிரியர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ள, 'யூசர் நேம், பாஸ்வேர்டு' மூலம்,  பதிவு செய்யவும். இதை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

How to enter Teacher's Profile on DSE website Tamil Tutorial (For Govt Schools)...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ எலச்சிபாளையம் ஒன்றியம்~ புதிய அலுவலக கட்டிடம் திறப்புவிழா நிகழ்வுகள் (07/01/18)…

வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH) நாட்கள்~2018...

பொது விடுமுறை நாட்கள்~2018...

சனி, 6 ஜனவரி, 2018

வேலகவுண்டம்பட்டியில் மன்ற ஒன்றிய அலுவலகம் திறப்பு(7-1-18~ஞாயிறு)...

ஞாயிறு  விடியல் நமக்கானதாகும்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வேலகவுண்டம்பட்டியில் மன்ற ஒன்றிய அலுவலகம் திறப்பு...
**********************
அன்பானவர்களே!வணக்கம்.

(07.01.2018-ஞாயிறு)முற்பகல் 09.00மணியளவில் வேலகவுண்டம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிப்பாளையம் ஒன்றியக்கிளையின் *ஒன்றிய அலுவலகம்திறப்புவிழா*நடைபெறுகிறது.

*எலச்சிப்பாளையம்  ஒன்றியக்கிளை பெரும்பாடுபட்டு பாசறையாக செயல்படத்தக்க வகையில் ஒன்றிய அலுவலகம்  திறக்கிறது.

*மாற்றமைப்பின் பொறுப்பாளர்களை மற்றும் உறுப்பினர்களை மன்றத்திற்கு இனிதே வரவேற்று இணைத்துக்கொண்டு  சிறப்புச்செய்கிறது.

*அலுவலகம் திறப்பு மற்றும் மன்றத்தின் வளர்ச்சி ஆகியனவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்வில்  விழாவின் பங்கேற்பாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அறுசுவையில் விருந்தோம்பல் செய்கிறது.

*நாமக்கல்  மாவட்டத்தின் மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்களின்,மன்றமுன்னோடிகளின்,ஆசிரியப்பெருமக்களின் பங்கேற்பை,வருகையை  உவகைபொங்க எதிர்பார்க்கிறது;இருகரம் குவித்து  வரவேற்கிறது.

* ஞாயிறு விழா வெகு சிறப்பாக அமைந்திட,வருகை தருவோரின் பாராட்டினை,வாழ்த்தினை பெற்றிட ஒன்றியவிழாக்குழு  கண்துஞ்சாது  பணியாற்றி வருகின்றது.

தங்கள் அனைவரிடமும் நான் வேண்டுவது யாதெனில்,
எலச்சிப்பாளையம் ஒன்றியக்கிளையின்பணிகளை ஊக்கப்படுத்திடும் வகையினில்,உற்சாகப்படுத்திடும் வகையினில்,
பெருமைப்படுத்திடும்வகையினில்,பாராட்டிடும் வகையினில் (ஞாயிறு) வேலகவுண்டம்பட்டியில் சங்கமிப்பீர் என அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.

SABL விடைபெறுகிறது.இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது...


Pedagogy method group details:

Green colour Teacher card. (Teaching lesson to students)

Blue colour Peer group activity.

Pink colour individual activity.

Yellow colour Evaluation.

EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாம்!


EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தும்
விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் EMIS எண் உடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எடுத்து ஆதார் வராத மாணவர்களின் ENROLMENT NUMBER எண்ணை 1947 எண்ணில் அலைபேசியில் அழைத்தால் அவரது ஆதார் எண் அம்மாணவனின் அலைபேசிக்கு சென்று விடும்.