சனி, 13 ஜனவரி, 2018

தொடக்க கல்வி- Diploma தேர்வு- ஜனவரி-17ல் 'ரிசல்ட்'...


தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு ஜனவரி 17ம் தேதி வெளியாகிறது.

இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர் ஜனவரி 17ம் தேதி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும்
சான்றிதழ்களை பெறலாம்.

இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
அதில், குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை வரும் 22 முதல் 25ம்தேதிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

DGE - Diploma in Elementary Education Examination June 2018- First & Second Year Time Table...

11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு...


தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வு மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும்.
 தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுமை பள்ளி விருதுக்கான கருத்துருக்கள் 17/01/2018 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தல் சார்பு...

DGE-DEE - 2017 - Issuing of Certificates and Scan / Retotal Notifications....