செவ்வாய், 30 ஜனவரி, 2018

DEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்-அரசு அலுவலருக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி பெறுவதற்கான தொடர்நடவடிக்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள்...

EMIS-மாணவர்களின் முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்தல்-நாமக்கல் மாவட்டகூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

எலச்சிபாளையம் ஒன்றியம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு(29.01.2018)~நிகழ்வுகள்..

எலச்சிபாளையம் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக,
நாமக்கல் மாவட்ட கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நற்சான்று பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ""  து.மாலதி அம்மா "" அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்...
 

சனவரி 30~தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம்~தொழுநோய் ஒழிப்புதினம்~உறுதி மொழி...

சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை  இந்திய அரசு தொழுநோய்   ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது.   

மகாத்மாவின் கல்விக்கொள்கை...

'வாழ்க்கைக்கான கல்வி;
 வாழ்க்கை மூலம் கல்வி; 
வாழ்க்கை முழுவதும் கல்வி' என்பவையே மகாத்மாவின் கல்விக்கொள்கையாகும்.

காந்தியக் கல்வியின் அடிப்படை
" தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது" என்பதேயாகும்.

சனவரி 30~ இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகள் தினம்…

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ...

திங்கள், 29 ஜனவரி, 2018

வருமான வரி செய்திகள்...


✍ஆசிரியர்கள் கவனத்திற்கு  நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் என கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் கூட்டத்தின் வாயிலாக கூறியிருப்பார்.........

✍Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

✍சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , ஆசிரியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....

✍ நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...

✍பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 

✍பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்தையாக ஆசிரியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....
 
✍வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate Form -16 ...... .                               ✍வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.

✍தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.

✍தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி👇

The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block ,
Aayakar Bhawan ,
121, M.G.Road ,
Chennai-34.

நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களுக்கு சேலம்மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியச்செயலாளர் திரு.சி.மோகன்குமார் அவர்களின் கடிதம்...