புதன், 31 ஜனவரி, 2018

வானில் 'மூன்று' நிலா!


சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, சிவப்பு நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம் (ஜன-31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.

இன்றைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் சிவப்பு நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்....

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.

சிவப்பு நிலா...

சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'சிவப்பு நிலா' என அழைக்கப்படுகிறது.

நீலநிற நிலா...

மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.

எங்கு தெரியும்...

இந்தியாவில் (ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணிமுதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது?

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ கபிலர்மலை ஒன்றியம் - ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/01/2018)~நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்...

DEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்-அரசு அலுவலருக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி பெறுவதற்கான தொடர்நடவடிக்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள்...

EMIS-மாணவர்களின் முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்தல்-நாமக்கல் மாவட்டகூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

எலச்சிபாளையம் ஒன்றியம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு(29.01.2018)~நிகழ்வுகள்..

எலச்சிபாளையம் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக,
நாமக்கல் மாவட்ட கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நற்சான்று பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ""  து.மாலதி அம்மா "" அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்...
 

சனவரி 30~தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம்~தொழுநோய் ஒழிப்புதினம்~உறுதி மொழி...

சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை  இந்திய அரசு தொழுநோய்   ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது.   

மகாத்மாவின் கல்விக்கொள்கை...

'வாழ்க்கைக்கான கல்வி;
 வாழ்க்கை மூலம் கல்வி; 
வாழ்க்கை முழுவதும் கல்வி' என்பவையே மகாத்மாவின் கல்விக்கொள்கையாகும்.

காந்தியக் கல்வியின் அடிப்படை
" தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது" என்பதேயாகும்.

சனவரி 30~ இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகள் தினம்…

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ...