வணக்கம். ஆசிரியர் மன்ற செயற்க்குழு தீர்மான அறிக்கைபடி பாவலரின் அறிவிப்பான
1.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கோரியும்,
2.எ மற்றும் பி பிரிவு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் கோரி மாநில அரசை வலியுறுத்தியும்,
3.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்து தமிழை அவமரியாதை செய்த காஞ்சிபுரம் சங்கர மடம் திரு.விஜயேந்திரர் அவர்களின் செயலை கண்டித்தும் கண்டன ஆர்பாட்ட போர்பாட்டம் செய்யுமாறு தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து கண்டன முழக்கங்கள் எழுப்புமாறு மன்ற மறவர்களையும் மறத்தியர்களையும் பணித்தார். பாவலரின் கட்டளைக்கு இணங்கி 6 மண்டலங்களிலும் ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்களும், மன்ற மறவர்களும், மறத்தியர்களும் பெரும் திரளாக பொங்கி எழுந்து ஒன்று கூடி உணர்வு பூர்வமாகவும் எழுச்சியோடும் ஆர்பாட்ட போர்பாட்டம் நடத்தினார்கள். ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் உள்ளிட்ட அத்துனை மன்ற மறவர்களுக்கும் மறத்தியர்களுக்கும் மாநில அமைப்பின் சார்பாக வாடாத வாழ்த்துக்களையும் வற்றாத நன்றிகளையும் இதய பூர்வமான அளவில்லாத ஆசிகளையும் எண்ணிலடங்காத நன்றிகளோடு தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!! மாநில அமைப்பு.
நன்றியுடன் பாவலர். *திரு க.மீனாட்சிசுந்தரம்* பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.