வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்...

EMIS மற்றும் பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - DEEO செயல்முறைகள்...

EMIS-Report as on 02-02-2018 - All District...

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய...

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ click செய்யவும்...

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு...


தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அஞ்சல்தலை சேகரிப்பு-உதவித்தொகை திட்டம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் (31-01-2018)~மாநில அமைப்பின் வாழ்த்துக்கள்...

வணக்கம். ஆசிரியர் மன்ற செயற்க்குழு தீர்மான அறிக்கைபடி பாவலரின் அறிவிப்பான

 1.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கோரியும், 

2.எ மற்றும் பி பிரிவு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் கோரி மாநில அரசை வலியுறுத்தியும், 

3.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்து தமிழை அவமரியாதை செய்த காஞ்சிபுரம் சங்கர மடம் திரு.விஜயேந்திரர் அவர்களின் செயலை கண்டித்தும் கண்டன ஆர்பாட்ட போர்பாட்டம் செய்யுமாறு தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து கண்டன முழக்கங்கள் எழுப்புமாறு மன்ற மறவர்களையும் மறத்தியர்களையும் பணித்தார். பாவலரின் கட்டளைக்கு இணங்கி 6 மண்டலங்களிலும் ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்களும், மன்ற மறவர்களும், மறத்தியர்களும் பெரும் திரளாக பொங்கி எழுந்து ஒன்று கூடி உணர்வு பூர்வமாகவும் எழுச்சியோடும் ஆர்பாட்ட போர்பாட்டம் நடத்தினார்கள். ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் உள்ளிட்ட அத்துனை மன்ற மறவர்களுக்கும் மறத்தியர்களுக்கும் மாநில அமைப்பின் சார்பாக வாடாத வாழ்த்துக்களையும் வற்றாத நன்றிகளையும் இதய பூர்வமான அளவில்லாத ஆசிகளையும் எண்ணிலடங்காத நன்றிகளோடு தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!   மாநில அமைப்பு.

நன்றியுடன்  பாவலர். *திரு க.மீனாட்சிசுந்தரம்* பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

தொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் (31-01-2018)~நாளிதழ் செய்திகள்...

வியாழன், 1 பிப்ரவரி, 2018

Income-Tax - மீண்டும் வந்தது நிலையான கழிவு(ரூ 40000)...


 மாத சம்பளம் பெறுவோருக்கு  வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,  ஒரு  சலுகை  பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம். 

நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சரால் நீக்கப்பட்டது. 

தற்சமயம் மீண்டும்
நிலையான கழிவு திட்டம் வந்துள்ளது. 

முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புபடி ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும். இது குறிப்பாக, மாத சம்பளதாரர்களுக்கு நன்மையளிக்க கூடியது. உதாரணத்திற்கு ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.80 லட்சம் என்றால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை கழித்துவிட்டால் அவரது வருமானம் ரூ.2.40 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துவிடும். அவர் வரியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது. 

இன்னொரு உதாரணம். ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அதுவும் அவருக்கு லாபம் தரும். 

மெடிக்கல் செலவு ஆதாரம்... 

2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம்  காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக் கொள்ளலாம். 

வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை.