சனி, 3 பிப்ரவரி, 2018
வெள்ளி, 2 பிப்ரவரி, 2018
SmartPhoneல் நீங்கள் On/Off செய்ய வேண்டிய முக்கியமான 3 Settings...
ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் தான் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கும். ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற செட்டிங்ஸ் முறையை ஆஃப் செய்வது மிகமுக்கியம்.
க்ரோம்:
ஸ்மார்ட்போனில் கூகுள் க்ரோம் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர் அதிக கவனமாக இருத்தல் வேண்டும், மேலும் உங்களுடைய தகவல்களை கூகுள் க்ரோம் மூலம் ட்ராக் செய்ய வாய்ப்பு உள்ளது, இதனை தவிரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் உங்கடைய கூகுள் க்ரோம் இண்டர்நெட் பக்கத்தை ஓபன் செய்து, அதில் மேலே கொடுக்கப்பட்டடுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அதன்பின்பு செட்டிங்ஸ் பகுதியில் நுழைந்தால், privacy-எனும் அமைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3:
அடுத்து privacy-பகுதயில் உள்ள do not track-எனும் அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருக்கும், அதை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கும்
பாப்-அப் :
உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையற்ற புகைப்படங்கள், விளம்பரங்கள், தகவல்கள் போன்றவற்றை தவிர்க்க பாப்-அப் நோட்டிபிகேஷனை ஆப் செய்ய வேண்டும், இதற்கான சில வழிமுறைகள் உள்ளது.
வழிமுறை-1:
முதலில் உங்கடைய கூகுள் க்ரோம் இண்டர்நெட் பக்கத்தை ஓபன் செய்து, அதில் மேலே கொடுக்கப்பட்டடுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அதன்பின்பு செட்டிங்ஸ் பகுதியில் site setting-எனும் அமைப்பு இருக்கும், அவற்றை கிளிக் செய்து பாப்-அப் நோட்டிபிகேஷனை ஆப் செய்ய முடியும்.
நோட்டிபிகேஷன்:
வழிமுறை-1:
உங்கள் ஸ்மார்ட்போனில் நேரடியாக உள்ள செட்டிங்ஸ் பகுதியில் நோட்டிபிகேஷன் எனும் ஒரு அமைப்பு இருக்கும், அவற்றில் உள்ள don't show notification at all-எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் தகவல்கள் மற்றும் செய்திகள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும்.
தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய...
தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ click செய்யவும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)