ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

SSA-SPD PROCEEDINGS-அனைவருக்கும் கல்வி இயக்கம்- 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியப் பயிற்றுநர்களை வட்டார வளமையத்திற்கு மாற்றுப்பணியில் பணிபுரிய மாநில திட்ட இயக்குநர் கடிதம்....

தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்~ அக்டோபர் 2 முதல் அமல் மத்திய அரசு அறிவிப்பு!


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.   

Whatsapp ன் அடுத்த Update- Message ஐ பேசினால், அதுவாகவே Type செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...



வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சனவரி 2018 _ மாத ஊதியம் உடனடியாக வழங்கிடக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை _ காலைக்கதிர் நாளிதழில்...

ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் (03-02-2018) ~ ஊடகச் செய்திகள்...

சனி, 3 பிப்ரவரி, 2018

மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளப்படுத்திட பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது...

Spl CL~GO-28...

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அவர்களுக்கு உதவ இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த இயக்குனர் அறிவுரை....

வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்வது தொடர்பாக சார்நிலை கருவூலம் தெளிவுரை...

தொடக்கக்கல்வி - கூடுதலாக வழங்கப்பட்ட(B.Ed) ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த AEEO வழங்கிய தடையாணைக்கு விளக்கம் கோரி இயக்குனர் கடிதம் - செயல்முறைகள்...