வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

TRB-PRESS RELEASE- 16.09.17 அன்று நடைபெற்ற அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் எழுத்துத்தேர்வு ரத்து.மீண்டும் தேர்வு ஆகஸ்ட் 2018 -ல் நடைபெறும்...

Income tax benefits in Sukanya Samriddhi Account...

அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்~ உச்சநீதிமன்றம் உத்தரவு...


அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சிறார்கள் சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து...

தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு
விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வி ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த அவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:
ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சிலின் (என்சிடிஈ) விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாடு முழுவதும் 133 ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் திரும்பப் பெறப்பட்டது.

தமிழகத்தில் 20 கல்வி நிறுவனங்கள், கர்நாடகத்தில் 29, மகாராஷ்டிரத்தில் 28, மத்தியப் பிரதேசத்தில் 17 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது
இந்தப் பட்டியலில் தில்லியைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இல்லை என்று அந்தப் பதிலில் உபேந்திர குஷ்வாகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஓராண்டு வரை அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.

Income Tax பற்றி சில ஆலோசனைகள்~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.…


✍Professional Tax செலுத்தி, கட்டிய  ரசீது இணைக்கவும் .

✍ Pay Com arrears ஐ பிரித்துக் காட்டவும். HRA கூடுதலாக கழிக்கலாம்.

✍EL surrender பிரித்துக்காட்டத் தேவையில்லை.

✍ இரு நகல்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும்.

✍காட்டிய எல்லா Deductionsக்கும் உரிய சான்றுகள் & நகல்கள் வைக்கவும்

✍ பிப்ரவரி 10க்குள் சமர்ப்பிக்க ஏதுவாய் கணக்கிட்டுக் கொள்ளவும்.

✍80.C-ல் CPS தொகை தவிர்த்து மொத்த சேமிப்பு ₹150000 வரும் பட்சத்தில் கூடுதலாக CPS-₹50000 80CCD1-ல் கழித்து கொள்ளலாம்.(80C,150000+CPS 50000)
                                                                                      
✍PLI/LIC செலுத்துபவர்கள் தாங்கள் செலுத்திய TAX சேர்த்து கணக்கிட்டு எழுதவும்(PLI- SERVICE TAX/SBC/KKC/CGST/SGST).
                                                                                     
✍3 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear , Bonus, surrender, pay fix arrear if any)

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன்   ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍Taxable income 3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
                                                         ✍Over due payment recovery கழித்து கொள்ளலாம். 

வியாழன், 8 பிப்ரவரி, 2018

விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!


உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 

நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

DEE PROCEEDINGS- 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்...

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

SALM WEEKLY TIME TABLE...

Whatsapp ல் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது...

வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில்குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில்சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது.

வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசீகரிக்கும் வகையில் இந்த வீடியோ கான்ஃபரன்சிங் வசதி இருக்கும் என்று பயனாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த குழு வீடியோ கால் வசதி அறிமுகமானால் வீடியோ கால் வசதியினை அளிக்கும் ஸ்கைப், IMO உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு குறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.இது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று பல்வேறு விதமான ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் அப்பில் புகுத்த இருக்கின்றனர்.

இந்த புதிய அம்சங்கள் இணைவதன் வாயிலாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும்சுவாரஸ்யம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாட்ஸ் அப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.முதலில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Schools - Students Daily Attendance and Monthly Report - Android Mobile App Published...