புதன், 14 பிப்ரவரி, 2018

EMIS-STUDENT PHOTO REPORT AS ON 14/02/2018...

DSE - மாணவர்களுடன் 16.02.2018 அன்று பிரதமர் கலந்துரையாடல் - அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...

அரசாணை எண் 17 பள்ளிக்கல்வி நாள்:07/02/18- பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு அரசாணை வெளியீடு...

கல்லூரி தரவரிசை ~ யு.ஜி.சி., உத்தரவு…


பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான, 'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து வழங்கப்படுகிறது.

எட்டு வகை, 'கிரேடு'களில், தரவரிசை தரப்படுகிறது. ஒவ்வொரு பல்கலையும், கல்லுாரியும், நாக் தரவரிசையை கட்டாயம் பெற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் கல்வி நிறுவனங்களின் தரவரிசை குறித்து, சில கல்லுாரிகள், மாணவர்களுக்கு தவறான தகவலை தருவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

இதை தடுக்கும் வகையில், கல்லுாரிகளும், பல்கலைகளும், தாங்கள் பெற்ற, தரவரிசை குறித்த விபரத்தை, தங்கள் நிறுவன இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ நாமக்கல் மாவட்டம் . ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் _ திருச்செங்கோடு _ 13/02/2018. ஊடக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ...

அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது...



2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், 
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடந்தது.விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு பெறும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும்.

சீருடைகள் மாற்றம்:-

அரசு பள்ளிக்கூட சீருடைகள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகளுக்கு வருகிற கல்வி ஆண்டில்(2018-2019) மாற்றப்படுகிறது. 

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்தில் சீருடைகளும்,

 6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை மற்றொரு நிறத்திலும், 

9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வேறு ஒரு நிறத்திலும், 

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்-மாணவிகளுக்கு இன்னொரு நிற சீருடைகளும் என்று 4 வகையாகமாற்றப்பட உள்ளது. இதுபற்றி 'தினத்தந்தி' நாளிதழிலும் பள்ளிக்கூட சீருடைகள் மாறுகிறது என்று செய்தி வந்தது.

1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கப்படுகிறது. 9-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் 20 அல்லது 30சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்கள் 51 பேருக்கு இங்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த வருடம் விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் என்று உயரவேண்டும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் புதிய பாடத்திட்டம் குறித்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு~ தமிழக அரசு…


இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தால் ரூ 25 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.