புதன், 21 மார்ச், 2018

தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL...


தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL"  என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4TAMIL" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து தமிழ் ஆசிரியர்களும் "ICT4TAMIL" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.

Link...

பத்தாம் வகுப்பு கணிதத்தில் சதம் அடிக்கத் தேவை துல்லியம்...

பல்புகள் வழியாக இன்டர்நெட்...



உலகளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்களில் ஒன்றான பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும்.
இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் - லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

லைஃபை (LiFi)
இன்டர்நெட் ஆப் திங்ஸ்தனை பின்பற்றும்மொரு நிறுவனமான பிலிப்ஸ், இந்த லைஃபை தொழில்நுட்பத்தை கூடிய விரைவில் பாரிய அளவில் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதக்கில்லை. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் இரு வழி மற்றும் அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பமாகும். ஆனால் டேட்டா பரிமாற்றத்திற்கு, ரேடியோ அலைகளுக்கு பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்துகிறது, அவ்வளவு தான் வித்தியாசம்.

30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட்.!
பிலிப்ஸ் நிறுவனத்தின்படி, இந்த லைஃபை தொழில்நுட்பமானது, ஏற்கனவே அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வகை விளக்குகள் ஆனது ஒளியின் தரத்தில் எந்தவிதமான சமரசமின்றி, சுமார் 30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட் இணைப்பையும் வழங்கிவருகிறது.

சாத்தியமான தொழில்நுட்பம்.!
30எம்பிபிஎஸ் அளவிலான வேகமென்பது ஒரு பெரிய வேகமாக இல்லாவிட்டாலும் கூட, இதுவே பெரும்பாலான இணையம் சார்ந்த வேலைகளை முடிக்க நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்பது வெளிப்படை. அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த லைஃபை தொழில்நுட்பமானது, எதிர்கால வாடிக்கையாளர்களுக்கான சாத்தியமான தொழில்நுட்பங்களில் ஒன்றென்பதிலும் ஐயமில்லை.

சரியான தேர்வாகும்.!
ரேடியோ அதிர்வெண்களானது (radio frequencies) நெருக்கமாகி கொண்டே வருகின்ற நிலைபாட்டில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற சிந்தனைகளுக்கு, ஒரு பெரிய அலைவரிசை கொண்ட ஒளி நிறமாலை (light spectrum) போன்ற தொழில்நுட்பம் தான் சரியான தேர்வாகும் அல்லது ஆதாரமாகும்.

GATE-2018 Score card...

திங்கள், 19 மார்ச், 2018

தஞ்சாவூர் மாவட்ட உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை ஏப்ரல்-18...

பள்ளி மேம்பாட்டுத் திட்டம்...

அய்யன் திருவள்ளுவரின் குறள்கள் ஆங்கிலத்திலும்,தமிழிலும்...

இதயம் காக்கும் உணவுகள்...


அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும் பழக்கம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.

* அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்ணக் கூடாது.

* கீரை வகைகளை ஒதுக்கினால் இதயத்தின் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அனைத்து வகையான கீரைகளிலும் அடர் பச்சை நிற இலைகளை கொண்ட காய்கறிகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதய நலனுக்கு அவசியமானது.

* பார்ப்பதற்கு அழகாகவும், ஆடம்பரமாகவும் தெரிகிறது என்பதற்காக எண்ணெய் ஒட்டாத சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது இதய நோய்க்கு வழி வகுத்துவிடும். அந்த பாத்திரங்களில் உள்ள டெப்லான் பூச்சு மற்றும் செயற்கை வண்ணங்கள் சமைக்கும் போது உணவுடன் கலந்து நரம்பு செல்களை பாதிப்படையச் செய்துவிடும்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்திற்கு கெடுதலை உண்டாக்கும். இது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

* உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் கடுமையான மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.

* பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதில் சோடியம் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகளவில் கலந்திருக்கும். இத்தகைய இறைச்சியை உண்பது இதய நோய், புற்று நோய் ஏற்பட வழிவகுத்துவிடும்.

* எண்ணெய்யில் வெகுநேரம் பொரிக்கப்பட்ட உணவுகளை உண்பது உடலில் கெட்டக் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிவிடும். அது நல்ல கொழுப்பினையும் அழித்துவிடும்.

* பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட சூடான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். டப்பாக்களின் உள் புறம் பூசப்பட்டிருக்கும் பிஸ்பெனோல்-ஏ என்னும் ரசாயனம் உணவுடன் கலந்து இதயம் சார்ந்த நோய்களுக்கும், புற்று நோய்க்கும் வழிவகுக்கும்.

புதிய அப்டேட்களுடன் Whatsapp...


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது. 

அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும் வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது. 

இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.