புதன், 21 மார்ச், 2018

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்~ மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு…


அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. 

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 60
பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கடி அழகப்பா ஆகிய 3 மாநில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படுள்ளது.

இதேபோன்று ராமச்சந்திரா , தஞ்சை சாஸ்த்ரா, வேலூர் விஐடி, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை அமிர்த விஷ்வா உள்ளிட்ட நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்என் தனியார் கல்லுரிக்கும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

தன்னாட்சி அதிகாரத்தின் மூலம் புதிய கல்வித் திட்டத்தையும் திறன் மேம்பாட்டு படிப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் அந்த கல்வி நிறுவனங்களே சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

போக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும்...

மாணவர்களின் கல்விச் சுமையை 50 சதவீதம் வரை குறைக்க திட்டம்...


மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.

கரூர் மாவட்டம்~க.பரமத்தி ஒன்றியம்~க.பரமத்தி ஊ.ஒ.தொ.பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச் செய்ய தயாரித்துள்ள குறும்படம்...

அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'...


தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், 
உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில்,
அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
அனுமதி பெறாமல்
இந்நிலையில், இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம்கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பினர். அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும்மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

படித்தது எப்படி:

மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா; உயர்கல்வி படித்த காலம் எப்போது; துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, '17 - பி' என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், 'மெமோ' கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL...


தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL"  என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4TAMIL" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து தமிழ் ஆசிரியர்களும் "ICT4TAMIL" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.

Link...

பத்தாம் வகுப்பு கணிதத்தில் சதம் அடிக்கத் தேவை துல்லியம்...

பல்புகள் வழியாக இன்டர்நெட்...



உலகளாவிய ரீதியில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்களில் ஒன்றான பிலிப்ஸ் லைட்டிங், இப்போது லைட் ஃபீடிலிட்டி (லைஃபை ஃபி) என்றழைக்கப்படுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இது உயர் தரமான எல்.ஈ.டி விளக்குகளின் ஒளி அலைகளின் வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குமொரு தொழில்நுட்பமாகும்.
இந்த முயற்சியின் வாயிலாக, ஒரு முழுமையான மின் ஒளி அலகுகளை (லுமினரீஸ்) தயாரிக்குமொரு நிறுவனமான பிலிப்ஸ் - லைஃபை செயல்படுத்தப்பட்ட ஒளி வீசுகின்ற விளக்குகளை வழங்கும் உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

லைஃபை (LiFi)
இன்டர்நெட் ஆப் திங்ஸ்தனை பின்பற்றும்மொரு நிறுவனமான பிலிப்ஸ், இந்த லைஃபை தொழில்நுட்பத்தை கூடிய விரைவில் பாரிய அளவில் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதக்கில்லை. வைஃபையை போன்றே லைஃபை (LiFi) ஆனதும் இரு வழி மற்றும் அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பமாகும். ஆனால் டேட்டா பரிமாற்றத்திற்கு, ரேடியோ அலைகளுக்கு பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்துகிறது, அவ்வளவு தான் வித்தியாசம்.

30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட்.!
பிலிப்ஸ் நிறுவனத்தின்படி, இந்த லைஃபை தொழில்நுட்பமானது, ஏற்கனவே அதன் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இவ்வகை விளக்குகள் ஆனது ஒளியின் தரத்தில் எந்தவிதமான சமரசமின்றி, சுமார் 30எம்பிபிஎஸ் வேகத்தில்லான பிராட்பேண்ட் இணைப்பையும் வழங்கிவருகிறது.

சாத்தியமான தொழில்நுட்பம்.!
30எம்பிபிஎஸ் அளவிலான வேகமென்பது ஒரு பெரிய வேகமாக இல்லாவிட்டாலும் கூட, இதுவே பெரும்பாலான இணையம் சார்ந்த வேலைகளை முடிக்க நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்பது வெளிப்படை. அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த லைஃபை தொழில்நுட்பமானது, எதிர்கால வாடிக்கையாளர்களுக்கான சாத்தியமான தொழில்நுட்பங்களில் ஒன்றென்பதிலும் ஐயமில்லை.

சரியான தேர்வாகும்.!
ரேடியோ அதிர்வெண்களானது (radio frequencies) நெருக்கமாகி கொண்டே வருகின்ற நிலைபாட்டில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற சிந்தனைகளுக்கு, ஒரு பெரிய அலைவரிசை கொண்ட ஒளி நிறமாலை (light spectrum) போன்ற தொழில்நுட்பம் தான் சரியான தேர்வாகும் அல்லது ஆதாரமாகும்.

GATE-2018 Score card...