புதன், 11 ஏப்ரல், 2018

01.01.16 முதல் 30.09.17 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டாம் தவணைத் தொகை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...

நீட் தேர்வில் இந்த ஆண்டு மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவர் ~ பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நம்பிக்கை…


தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் வெற்றி பெறுவார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்ய பாமா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியது: பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான பயிற்சியை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டத்துக்கான பயிற்சி மையம், சத்யபாமா பல்கலைகழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 மாவட்டங்களில் இருந்து 63 மாணவர்களும், 287 மாணவிகளும் இங்கு பயிற்சி பெறுகின்றனர் என்றார் அவர்.

இந்த ஆண்டு அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறந்த முறையில் நீட் தேர்வு பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மாணவ-மாணவிகள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் 6 ஆண்டுகள் தேவை என்பது குறைக்கப்பட்டு 4 ஆண்டுகள் போதுமானது எனபதற்கான அரசாணை வெளியீடு...

வாசிப்பு திறன் பதிவேடு...

சத்துணவு உண்ணும் மாணவ - மாணவியர் விபரம்...

ஆசிரியர்கள் எடுத்துள்ள விடுப்புகள் மற்றும் பயிற்சி விவரங்கள்...

AADHAR பதிவு விபரம்...

EMIS பதிவு விபரம்...

MBC கல்வி உதவித்தொகை பெற்று வழங்கிய விபரம்...