செவ்வாய், 17 ஏப்ரல், 2018

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும்.
இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.
முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருங்கால வைப்பு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை எடுக்க 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது...


இ.பி.எப்., எனப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில் பிப்ரவரியில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'வைப்பு நிதியில் இருந்து, ஒரே நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பும் ஊழியர்கள் ஆன்லைன் எனப்படும் இணையம் வழியே விண்ணப்பிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக  சந்தாதாரர்கள் புகார் அளித்தனர். 

இந்நிலையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில் சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை:

வைப்பு நிதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது குறித்து மூன்றுநாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

வைப்பு நிதியில், ஒரே சமயத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவில் பல சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் சந்தாதாரர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. இதை மனதில் வைத்து அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர், காகிதம் மூலமாகவும், இனி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

 கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதித்திருக்க முடியாது. ஐகோர்ட் கிளை விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

WhatsApp ல் புதிய Update ~அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யலாம்...


WhatsApp-ல் ஏற்கனவே அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்...

ஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும்.

சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போன் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

திங்கள், 16 ஏப்ரல், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு)~நாளிதழ் செய்திகளில்...

5% to 7% D.A ARREAR CALCULATION SHEET...

அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் வெளிநாடு செல்லலாம்- மத்திய அமைச்சகம் தகவல்...


அரசு ஊழியர்கள் குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையின்பொழுது வெளிநாட்டிற்கு செல்லலாம் என அரசு அதிகாரிகளுக்கான அமைச்சகம் புதிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையில் இருக்கும் ஊழியர் ஒருவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு துறை அதிகாரிகளின் முறையான ஒப்புதலை முன்பே பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த காலத்தில் விடுமுறை பயண சலுகையும் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் தங்கள் முழு பணி காலத்தில், விதிகளின்படி, அதிக அளவாக 2 வருடங்கள் வரை (730 நாட்கள்) குழந்தைகள் பராமரிப்பு விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தைகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றால் இந்த விடுமுறை அனுமதிக்கப்படாது என விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்...


தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு  தொடங்குகிறது. இந்த ஆண்டு 18 வயது வரையிலான குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுடைய இடைநின்ற அல்லது பள்ளிச் செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளிச் செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்கான குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி ஏப்ரல், மே மாதம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதியாண்டு (2018-19) முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய இரு திட்டங்கள் இணைந்து செயல்படும் புதிய வியூகம் இருப்பதால் அடிப்படை விவரங்களை சேகரிக்கும் பொருட்டு இந்த கணக்கெடுப்பில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச்செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிய திட்டமிடப்
பட்டுள்ளது.

தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர். மேலும் பள்ளியே செல்லாத குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள், அனைவரும் 'பள்ளிக்கு வெளியே உள்ளவர்கள்' ஆவர்.  அரசாணைப்படி 6 - 14 வயதுடைய பள்ளிச் செல்லா அல்லது இடைநின்றோரை கண்டறிந்து பள்ளிகளில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும். இத்துடன் கூடுதலாக இந்த ஆண்டு 15-18 வயதுடைய குழந்தைகளில் இடைநின்றோரை கண்டறிந்து பட்டியல் தயாரித்து வைத்தல் அவசியமாகும், அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 16ம்தேதி கணக்கெடுக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்-குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து, மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர். எனவே தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து சோதனை நடத்த வேண்டும். வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கூடவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பான விபரங்களையும் தனியே கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தாக்கம் (HEAT STROKES)~செய்யவேண்டியவை/செய்யகூடாதவை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு) : தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள்...