புதன், 18 ஏப்ரல், 2018

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்...


வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது.
மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள் பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

750 PP:நாமக்கல் DEEO கோரிய திருச்சி தணிக்கை தெளிவுரை வந்தால் அது 12 மாவட்டங்களுக்கும் பொருந்தும் முதல்வர் தனிப்பிரிவு பதில்...

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை 7.6% என அரசு அறிவிப்பு...

2017 - 2018 பள்ளி வேலை நாட்களும் , சதவிகிதமும்...


பள்ளியின் மொத்த வேலை நாட்கள் 210...

210-100%

209-100%

208- 99%

207-99%

206-98%

205-98%

204-97%

205-97%

204-97%

203-97%

202-96%

201-96%

200-95%

199- 95%

198-94%

197-94%

196-93%

195-93%

194-92%

193-92%

192-91%

191-91%

190-90%

189-90%

188-90%

187-89%

186-89%

185-88%

184-88%

183-87%

182-87%

181-86%

180-86%

179-85%

178-85%

177-84%

176-84%

175-83%

174-83%

173-82%

172-82%

171-81%

170-81%

DEE ~ 2017 - 2018 கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று இப்போது பணி விடுவிப்பு செய்யப்படாமல் இருக்கும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்...

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு)~நாளிதழ் செய்திகளில்...

EMIS - புகைப்பட பதிவேற்றம் (Photo updation ) - அடையாள அட்டை (ID Card approval) - மூன்றாம் பாலினைத்தவர் விவரங்கள் சரிபார்த்தல் - 02/04/2018 அன்றைய நிலவரப்படி விவரங்கள்அனுப்புதல்-சார்பு...

தொடக்கக் கல்வி~ 2017-2018 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள்-பணியிலிருந்து விடுவித்தல், அறிவுரை வழங்குதல் - சார்ந்து...

ஜாக்டோ ஜியோ மே 8 கோட்டை முற்றுகைப்போராட்டம்~ 23-04-2018 முதல் 27-04-2018 வரை தமிழகத்தின் 11 மண்டலங்களில் பிரச்சாரம்…

கோடை விடுமுறைக்கு பிறகே ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது...

 தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.