திங்கள், 30 ஏப்ரல், 2018

எம்பி, எம்எல்ஏ ஓய்வூதியத்திற்கு விலக்கு அளிப்பது போல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்~ ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தீர்மானம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாவட்ட மகளிரணி கூட்டம் அழைப்பிதழ்... [இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை,இராசிபுரம். நாள்:01.05.18(செவ்வாய்) பிற்பகல் 03.00மணி]


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாவட்ட மகளிரணி கூட்டம்அழைப்பிதழ்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடம்: 
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
பாரதிதாசன் சாலை,இராசிபுரம்.

நாள்:
01.05.18(செவ்வாய்)பிற்பகல் 03.00மணி

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் 
மே 8-சென்னை முற்றுகைப்
போராட்டத்தில் பெண்ணாசிரியர் பெருமளவில்  பங்கேற்றல்.சென்னைக்கு பயண ஏற்பாடு செய்தல்.

2)பெண்ணாசிரியர்
கல்விச்சுற்றுலா ஏற்பாடுசெய்தல் 
பெண்பொறுப்பாளர்கள் மற்றும் பெண்ணாசிரியர்கள்தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றியச்செயலாளர்கள் இக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
                            அன்புடன்...
                              கு.பாரதி,
     மாவட்டஅமைப்பாளர்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வெயிலுக்கு பயந்து AC-ல் இருப்பது நல்லதா?

இணையதளம் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கிய வில்லங்க சான்றிதழில் தவறுஇருந்தால் சரிசெய்யலாம்...

கண்ணுக்கு தெரியாத இலக்கையும் வானில் தாக்கி அழிக்கும் தேஜாஸ் சோதனை வெற்றி...

ஓராண்டு பணி முடித்த ஓய்வூதியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை. அரசாணை எண்: 140 / நிதித்துறை நாள் 25 .04.2018

SMS மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்...

National ICT Awards for School Teachers-2018...

Computer Knowledge...

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி...


8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில்
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.